Advertisment

அப்பா கூட உப்பு மூட்டை விளையாட்டு! மைனா கியூட் வீடியோ

விக்ரம் படத்தில் மைனா, விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் வெளியான விருமன் படத்திலும் கார்த்தியின் அண்ணியாக நடித்து அசத்தினார்.

author-image
WebDesk
New Update
myna nandhini

Myna Nandhini

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி. தற்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.

Advertisment

மதுரையைச் சேர்ந்த நந்தினி அங்குள்ள லோக்கல் சேனலில், தொகுப்பாளராக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கினார். அதில் நல்ல பெயர் கிடைத்ததால், சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. ஆனால் அவருக்கு புகழைத் தேடிக் கொடுத்தது, விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணண் மீனாட்சி சீரியல் தான். அதில் ஹீரோயின் தோழியாக மைனா கேரக்டரில் மதுரை பாஷை பேசி நடித்தது, நந்தினிக்கு நிறைய ரசிகர்களை தேடிக் கொடுத்தது.

நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு  திருமணம் நடந்தது. இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான்.

விக்ரம் படத்தில் மைனா, விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார். மேலும் சமீபத்தில் வெளியான விருமன் படத்திலும் கார்த்தியின் அண்ணியாக நடித்து அசத்தினார்.

தற்போது மைனா, ரியாலிட்டி ஷோ, யூடியூப், சினிமா என பிஸியாக இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 74 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர்.

சமீபத்தில் நந்தினியின் இன்ஸ்டா ரீல் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகியது. அதில் நந்தினி, அவரது அப்பாவை உப்புமூட்டை தூக்கிக் கொண்டு விளையாடியது பார்க்கவே பயங்கர கியூட் ஆக இருந்தது.

நந்தினியின் அப்பா ராஜேந்திரன். அவருக்கென இன்ஸ்டாவில் தனி கணக்கை வைத்துள்ளார். அதில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக இவர் ரீல்ஸ்களை பார்க்கும் போது ராஜேந்திரன் ஒரு ரஜினியின் தீவிர  ரசிகர் என்பது தெளிவாக தெரிகிறது. ரஜினியை போல் உடையணிந்து, ஹேர் ஸ்டைல் எல்லாம் வைத்து, ரஜினியின் வசனங்களுக்கு இவர் ரீல்ஸ் செய்வதை பார்க்கும் போது, ராஜேந்திரனுக்குள்ளும் ஒரு நல்ல கலைஞன் மறைந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

மைனா, தன் அப்பாவை உப்புமூட்டை தூக்கும் வீடியோ இப்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment