Advertisment

உண்மையாக நேசிக்கும் ஒரு உறவு! பிக்பாஸ் மைனா செலிபிரேஷன் வீடியோ

மைனாவை வரவேற்கும் விதமாக அவருடைய டெலிவிஷன் நண்பர்கள் மைனாவுக்கு பெரிய பார்ட்டி வைத்து கொண்டாடி உள்ளனர்.

author-image
abhisudha
New Update
Myna Nandhini

Myna Nandhini

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி, தற்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.

Advertisment

நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு  திருமணம் நடந்தது. இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 76 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர்.

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மைனா 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ஃபைனல்ஸ் வரை சென்றார். ஆனால் ஃபைனல்ஸ் முன்பாக நடந்த மிட்நைட் எவிக்‌ஷனில் யாருமே எதிர்பாராதவிதமாக மைனா வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் மைனாவை வரவேற்கும் விதமாக அவருடைய டெலிவிஷன் நண்பர்கள் மைனாவுக்கு பெரிய பார்ட்டி வைத்து கொண்டாடி உள்ளனர். அப்போது எடுத்த வீடியோவை மைனா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதில் மாகாபா அவரது மனைவி, ராஜ்மோகன், பிக்பாஸ் மணிகண்டா, பாடகி ரோஷினி அவரது கணவர் ஜேக், கலக்க போவது யாரு சரத் அவரது மனைவி கிரித்திகா என பலர் கலந்து கொண்டனர்.

அந்த வீடியோ இதோ!

இந்த வீடியோவை பார்த்த மைனா ரசிகர்கள், நீங்கள் ஏற்கெனவே மக்கள் மனதை ஜெயித்து விட்டீர்கள், மைனாவின் கணவர் மிகவும் நல்ல மனிதர், உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் என கமென்டில் பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment