Naam Iruvar Namaku Iruvar Serial Actress Rachitha Mahalakshmi Fitness
Naam Iruvar Namaku Iruvar Serial Actress Rachitha Mahalakshmi Fitness : தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல சீரியல்களில் நடித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் ரட்சிதா மஹாலக்ஷ்மி. 2011-ம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் திரைத்துறைக்கு நுழைந்தவர், சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் பல தொடர்களில் நடித்தார்.
Advertisment
தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ரட்சிதா, கன்னட திரைப்படம் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், பலருக்கும் நடிகைகள் மட்டும் எப்படி தங்களின் உடலமைப்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள் என்கிற கேள்வி எழுந்திருக்கும். 'இப்படி செய்தால் உடல் எடை அப்படியேதான் இருக்கும்' என்றபடி தன்னுடைய ஃபிட்னெஸ் சீக்ரெட்டுகளை சமீபத்தில் பகிர்ந்திருக்கிறார்.
"சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் எடை போடாது. ஆனால் எனக்கு, சாதாரணமாக மோந்து பார்த்தாலே எடை அதிகரித்துவிடும். அதுபோன்ற ஆள் நான். அதனால், உணவுக் கட்டுப்பாடு என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் பார்த்து பார்த்துதான் சாப்பிடுவேன். எண்ணெய், வறுத்த உணவுப் பொருள்கள், சர்க்கரை, உப்பு, மைதா, ரவை உள்ளிட்ட வெள்ளை உணவுப் பொருள்கள் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்துவிடுவேன். சாதம் என்றால் மிகவும் பிடிக்கும். என்றாலும், அதையும் ஒதுக்கிவிட்டேன். பிரியாணிகூட எப்போதாவது சாப்பிடவேண்டும் என்பது போல் தோன்றினால், இரண்டு ஸ்பூன் மட்டும் சாப்பிடுவேன். அந்த அளவிற்கு மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக டயட்டைப் பின்பற்றி வருகிறேன்.
அதேபோல எனக்கு ஸ்வீட்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், சிறிதளவு ஸ்வீட் சாப்பிட்டால்கூட என்னுடைய உடல் வலுவிழந்துவிடும். அதனால், அதையும் சாப்பிட மாட்டேன். இப்படிதான் ஆணடவன் என் வாழ்க்கையில் பெரும் சோதனையை உண்டுபடுத்தியிருக்கான்" என்று புலம்பியபடி தன்னுடைய ஒருநாள் உணவு பற்றி பகிர்ந்துகொண்டார்.
"காலை 4.40 எழுந்து, சின்ன சின்ன உடற்பயிற்சி செய்வேன். ஷூட்டிங் சாப்பாடு என் டயட்டிக்கு செட் ஆகாது என்பதால், 6 மணி போல நான் சாப்பிடுவதற்கான உணவை நானே சமைப்பேன். பொதுவாகவே தண்ணீர் நிறையக் குடிக்கவேண்டும் என்பார்கள். ஆனால், என்னவோ தெரியல நிறையத் தண்ணீர் குடித்தால் எனக்கு செட் ஆகாது. வாந்தி வந்துடும். அதனால் அளவோடுதான் குடிப்பேன். அடுத்தது, சுடுதண்ணீரில் கலந்த எலுமிச்சை மற்றும் தேன் கலவை குடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட் சென்றுவிடுவேன்.
ஸ்பாட்டிற்கு போனதும் சத்துமாவு கஞ்சி குடிப்பேன். அதுதான் என்னுடைய பிரேக்ஃபாஸ்ட். பிறகு 11 மணிபோல் பழங்கள், இளநீர் ஆகியவற்றை .உட்கொள்வேன். 12.30 போல ப்ரவுன் ரைஸ், சமைத்த காய்கறிகள் சாப்பிடுவேன். அதில் எப்போதும் பீட்ருட், கேரட், கீரை நிச்சயம் இருக்கும். சிறிது நேரம் கழித்து, மாதுளை மற்றும் ஊறவைத்த பச்சை பயிறு சாப்பிடுவேன். 7 மணிக்குலாம் என்னுடைய டின்னர் சாப்பிட்டு முடித்துவிடுவேன். அதற்கு, பனீர் அல்லது பார்லி அல்லது ஓட்ஸ். அவ்வளவுதான்" என்றவர் எடை குறைப்புக்கான ஸ்பெஷல் ட்ரிங்க் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
"எடை குறைப்புக்கு டீடாக்ஸ் தண்ணீர் போதும். நான், எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடிக்கிறேன். இதனை தினமும் குடித்து வந்தால், 15 நாள்களில் 1.50 கிலோ எடை குறையும். ஆனால், அதற்கேற்ற உணவுகளைத்தான் சாப்பிடவேண்டும். பிரியாணி, ஜங்ஸ் போன்ற உணவுப் பொருள்களை சாப்பிட்டால் நிச்சயம் பலன் இருக்காது. அதனால், அனைத்திலும் கவனம் தேவை" என்றபடி நிறைவு செய்கிறார்.
இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாக டயட் பின்பற்றும் இவர் ஜிம் பக்கமே சென்றதில்லையாம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil