Advertisment

கருவளையம் நீங்க என்ன செய்யலாம்? இயற்கைக் குறிப்புகள் இங்கே

தக்காளி பழத்தில் அதிகப்படியான லைகோபீன் எனும் வேதிப்பொருள் உள்ளது. இது, சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கருவளையம் நீங்க என்ன செய்யலாம்? இயற்கைக் குறிப்புகள் இங்கே

முகத்தின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில்,  கண்களைச் சுற்றியுள்ள மென்மையான தோல்கள்  குறைவான எண்ணெய் சுரப்பிகளைக் கொண்டது. நாம் வயதாகும்போது, சருமத்திற்கு தேவையான கொலாஜன், எலாஸ்டின் எனும் இரண்டு முக்கிய புரதங்களை  இழக்கின்றோம். இதனால், கண்களை சுற்றியுள்ள சருமம் சுருக்கமடைகிறது என்று அழகு சாதனம் மற்றும் சருமப் பராமரிப்பு நிபுணர் பூஜா நாக்தேவ்  தெரிவித்தார்.  UVA, UVB போன்ற புற ஊதாக் கதிர்களில் இருந்து கண்களுக்குக் கீழே உள்ள சருமத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியத்தையம் அவர் உணர்த்துகிறார்.

Advertisment

என்ன செய்யலாம்  ?

* தோல் சுருக்கத்தை தவிர்க்க  தினமும் காலையில் சன் ஸ்க்ரின் லோஷனைத் தடவலாம்.

* கண்களின் கீழ் உள்ள பகுதியை ஈரப்பதமாகவும், நீரேற்றமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் .

* கண்களுக்கு அருகே ரத்த ஓட்டம் சீராகாமல் இருப்பதினால் தான் கருவளையம் ஏற்படுகிறது. எனவே,  ஒரு நாளைக்கு இரண்டு முறை லேசான அழுத்தத்துடன்  விரல்களால் மசாஜ் செய்வது அவசியம்.

 

எளிதான இயற்கை குறிப்புகள் இங்கே

* கண்களுக்கு கீழ் இருக்கும் வீக்கத்தை குணப்படுத்த உருளைக்கிழங்கு ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது . இதில், அஸ்ட்ரிஜென்ட் பண்புகளைக் கொண்ட என்சைம்கள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது வீக்கத்தைக் குறைக்கவும் சருமத்தை இறுக்கவும் உதவுகிறது. துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உருளைக்கிழங்கை,  தினமும் கண்களில் வீக்கம் இருக்கும் இடத்தை சுற்றி 10 நிமிடங்கள் தடவுவும்.

* வெள்ளரிக்காய் நமது சருமத்தை பொலிவாக்குகிறது. லேசான அஸ்ட்ரிஜென்ட் பண்புகளையும் கொண்டுள்ளது.  குளிரூட்டப்பட்ட வெள்ளரிக்காயை ,துண்டுகளாக வெட்டவும். வீக்கம் இருக்கும் இடங்களின் மீது 10 நிமிடங்கள் தடவவும்.

* கெமோமில் தேநீர் இயற்கையான ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. சாறு இறங்கிய குளிர்ந்த டீபேக்கை வீக்கம் உள்ள இடங்களில் வைத்து எடுக்க வேண்டும். இது மனதை நிதானப்படுத்தவும், அமைதிப்படுத்தவும் உதவுகிறது.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

* தக்காளி பழத்தில் அதிகப்படியான லைகோபீன் எனும் வேதிப்பொருள் உள்ளது. இது, சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது. தக்காளியை நறுக்கியோஅல்லது சாராக்கியோ கரு வளையங்களில் தடவலாம் . இது கண்களின் கீழ் உள்ள பகுதியை ஒளிரச் செய்வதோடு நீரேற்றத்தையும் வழங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment