Advertisment

துவங்கியது நவராத்திரி... இந்த வழிபாட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்கள் இருந்தால் மரப்பாச்சியில் ஆண், பெண் பொம்மைகள் செய்து அலங்கரித்து கொலுவில் வைப்பார்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
navarathri golu ideas

navarathri golu ideas

navarathri golu ideas  : இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை,  29-09-2019ம் தேதி  துவங்கி 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது.  நவராத்திரி விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில், கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும். நவராத்திரி என்பது முதல் மூன்று தினங்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று தினங்கள் சக்திக்கும், கடைசி மூன்று தினங்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.

Advertisment

Navarathri Golu Ideas

நவராத்திரியில் ஒன்பதாவது நாளாக சரஸ்வதி பூஜை வழி நடத்தி வருகிறோம். சரஸ்வதி பூஜைய‌ன்று ‌அலுவலக‌ங்க‌ளிலு‌ம், வீடுக‌ளிலு‌ம் பூஜைக‌ள் செ‌ய்து வ‌ழிபடுவது வழக்கமாகும்.  ஒன்பது மலர்கள், ஒன்பது பழங்கள், ஒன்பது தானிங்கள், ஒன்பது பிரசாதங்கள், ஒன்பது விதமான அலங்காரங்கள், என ஒன்பது விதமான நிவேதனங்களால் முப்பெருந்தேவியரையும் பூஜித்து வழிபடுவது நவராத்திரி விழாவின் சிறப்பம்சமாகும். இவற்றுடன், கோலங்கள், பொட்டுக்கள், திரவியங்கள், தானங்கள், மந்திரங்கள், வாத்தியங்கள், பெயர்கள் என ஒவ்வொன்றும் ஒன்பது விதமாக அலங்கரிக்கப்படுகிறது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும்; ஒன்பது விதமாக அம்பிகையை பூஜித்து வழிபாட வேண்டும். இதனால், நம் வாழ்க்கை இன்னும் அழகாகும், நலம் பெறும் என்பதே இவ்விழாவின் சிறப்பம்சம்யாகும்

publive-image

இந்த ஒன்பது நாள் நவராத்திரியை வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மேலும், நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்பிகையை அலங்கரித்து வழிபடுவது நமது மரபாக இருக்கிறது.அனைத்து நவராத்திரி விழாக்களும் இரவு நேரங்களில் மட்டுமே பூஜை செய்யப்படும். இந்த பூஜைகள், தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு, இரவில் நாவராத்திரியை வழிபடுகிறார்கள். மறுநாள் விஐயதசமி அன்றுதான், பெரும்பாலனவர்கள் தங்களது குழந்தைகளுக்கு புதிய கல்வி கற்பிப்பதைத் முறையாக தொடங்குவார்கள்.

பிரார்த்தனைக்கும் கொண்டாட்டத்திற்கும் சாப்பிடுவதற்குமான அந்த 9 நாட்கள்!

வீட்டில் கொலு வைப்பதால் முப்பெருந்தேவியரின் அருள் கிடைக்கும். குறிப்பாக செல்வம், அறிவு, தைரி யம் போன்றவை வந்து சேரும். திருமணமான பெண்கள் இந்த பூஜையை நடத்தினால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். குடும்பம் சிறப்படையும்.

திருமணமாகாத பெண்கள் இந்த பூஜையை நடத்தினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடுவதோடு நல்ல வரனாகவும் கிடைக்கும்.

முன்பெல்லாம் வீட்டில் கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்கள் இருந்தால் மரப்பாச்சியில் ஆண், பெண் பொம்மைகள் செய்து அலங்கரித்து கொலுவில் வைப்பார்கள், கொலுவில் எப்போதும் இடம் பெறும் மரப்பாச்சியிலான பொம்மைகள் இடம் பெறுவது சிறப்பாக கருதப்படுகிறது.

Navaraththiri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment