தமிழர்களின் திருமணங்களில் வட இந்திய கலாச்சாரம்? – நீயா நானாவுல இந்த வாரம் செம டாபிக்

“மாப்பிள்ளை பொண்ணோட வழியுற வேளையில் சொந்தங்கள் சொல்லாம மறைஞ்சிருக்கும் கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல சந்தோசம் காத்தோட நெறஞ்சிருக்கும்” என்று தமிழக திருமணங்களின் எதார்த்தங்களை எதார்த்தமாக எதிரொலிக்கும் இந்த வரிகள் சூப்பர் ஸ்டார் நடித்திருக்கும் ‘தர்பார்’ படத்தின் டும் டும் பாடலில் வரும் வரிகளாகும். நமது தமிழ் மரபு திருமணத்தில் நடக்கும் பல சுவாரஸ்யங்களில் இந்த வரிகள் ஒரு சாம்பிள் தான். இனி நான் மிசஸ் ஸ்ரீத்திகா: கல்யாணத்தை உறுதிப் படுத்திய ’கல்யாணப் பரிசு’ நடிகை ஆனால், […]

Neeya naana this week topic gopinath vijay tv hotstar - தமிழர்களின் திருமணங்களில் வட இந்திய கலாச்சாரம்? - நீயா நானாவுல இந்த வாரம் செம டாபிக்
Neeya naana this week topic gopinath vijay tv hotstar – தமிழர்களின் திருமணங்களில் வட இந்திய கலாச்சாரம்? – நீயா நானாவுல இந்த வாரம் செம டாபிக்

“மாப்பிள்ளை பொண்ணோட வழியுற வேளையில்

சொந்தங்கள் சொல்லாம மறைஞ்சிருக்கும்

கேலியும் கிண்டலும் நடக்குற கூத்துல

சந்தோசம் காத்தோட நெறஞ்சிருக்கும்”

என்று தமிழக திருமணங்களின் எதார்த்தங்களை எதார்த்தமாக எதிரொலிக்கும் இந்த வரிகள் சூப்பர் ஸ்டார் நடித்திருக்கும் ‘தர்பார்’ படத்தின் டும் டும் பாடலில் வரும் வரிகளாகும்.

நமது தமிழ் மரபு திருமணத்தில் நடக்கும் பல சுவாரஸ்யங்களில் இந்த வரிகள் ஒரு சாம்பிள் தான்.

இனி நான் மிசஸ் ஸ்ரீத்திகா: கல்யாணத்தை உறுதிப் படுத்திய ’கல்யாணப் பரிசு’ நடிகை

ஆனால், இன்று தமிழர்களின் திருமணம் நமக்கென்று இருக்கும் சில மரபுகளை தாண்டி செல்கிறதோ என்ற ஐயம் நமக்குள் பயத்துடன் எழுகிறது. அதுவும், திருமணத்துக்கு முந்தைய போட்டோகிராபி என்று சில தனியார் நிறுவனங்கள் செய்யும் அலப்பறைகள் கொடுமை ரகம்.

கல்யாணத்துக்கு முன்னதாகவே எங்கயாவது மலையடிவாரம், வாய்க்கால், என்று அழைத்துச் சென்று டிசைன் டிசைனாக போட்டோ எடுக்கிறோம் என்ற பெயரில் ஆபாசத்தின் உச்சிக்கே செல்கின்றனர். கல்யாணம் ஆகப் போகிறவர்களும் கூச்சமே இல்லாமல், அவர்கள் சொல்லும் போஸ்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது திருமணத்துக்கு முந்தைய கூத்து என்றால், திருமணம் நடக்கும் அன்று நடக்கும் கூத்துக்கு பஞ்சமே இல்லை. அதைப் பற்றி நாம் பேச ஆரம்பித்தால் விடிய விடிய பேசிக் கொண்டிருக்கலாம்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த நடிகை ஷர்மிளா – பணமில்லை என வேதனை

சரி விஷயத்துக்கு வருவோம்,

விஜய் டிவியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகும் நீயா நானா ஷோவில். வரும் வாரம், ‘தமிழர்களின் திருமணங்களில் வட இந்திய கலாச்சாரம் வேரூன்றி விட்டதா?’ எனும் தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.


ஒருபக்கம், வடஇந்திய ஸ்டைலில் கல்யாணம் பண்ணும் தமிழ் குடும்ப ஜோடிகள் அமர்ந்திருக்க, எதிர்புறம் அவர்களை வச்சு செய்ய தமிழ் மரபு திருமண ஆதரவு தரப்பு உள்ளது. நிச்சயம் இந்த வார எபிசோட் பயனுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Neeya naana this week topic gopinath vijay tv hotstar

Next Story
பெற்றோரின் பயங்கர எதிர்ப்பை சமாளித்து காதலை வென்ற காமெடி ஜோடி!Kalakka povathu yaaru Anjali Prabhakaran
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com