Nellikkai Benefits, Nellikkai Poriyal: நெல்லிக்கனியில் உள்ள மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது. சாதாரணமாக நெல்லிக்காய் ஜூஸ், ஊறுகாய் என்றெல்லாம் தான் சாப்பிட்டிருப்போம். இதனை எப்படி பொரியல் செய்வது என்பதை இங்கே குறிப்பிடுகிறோம்.
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபிஸ் குயின்ஸ் இவங்க தான்!
தேவையானப் பொருட்கள்
பெரிய நெல்லிக்காய் – 10
இட்லி மிளகாய்ப் பொடி – 2 டீஸ்பூன்
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, சீரகம் – தேவையான அளவு
தாளிக்க
கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.
ஆ.ராசா, பொன்முடிக்கு திமுக.வில் புதிய பதவி – பொதுக்குழுவில் அறிவிப்பு
செய்முறை
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நெல்லிக்காயின் விதைகளை நீக்கி ஆவியில் வேக விடவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில் வேக நெல்லிக்காய் துண்டுகள், உப்பு, இட்லி மிளகாய் பொடி சேர்த்துக் கிளறவும்.
இறுதியாக கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”