விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், நிவாஷினி தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
நிவாஷினிக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் அதிக ஆர்வம். சிங்கப்பூரில் வெப்சீரிஸ், குறும்படங்களில் நடித்த அவருக்கு சமீபத்தில் ஒரு வெப் சீரிஸில் உதவி இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. நிவாஷினி ஒரு ஆடை வடிவமைப்பாளரும் கூட.
பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நிவாஷினியும், குயின்சியும் நெருக்கமான தோழிகளாக இருந்தனர். பிபி வீட்டை விட்டு முதலில் நிவாஷினி வெளியேறியபோது, அவரது பிரிவை தாங்கமுடியாமல் குயின்சி மனம் உடைந்து கண்ணீர் விட்டு அழுதார்.
அடுத்த சில வாரங்களிலே குயின்சியும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அதன்பிறகு இருவரும் வெளியே சந்தித்து கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்களை நிவாஷினி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த குயின்சி ஸ்டான்லி, கல்லூரி 2வது ஆண்டு படிக்கும்போது மாடலிங் துறையில் நுழைந்தார். பாண்ட்ஸ், ஹமாம், லைஃப் பாய், வைல்ட் மிலன் போன்ற சர்வதேச இந்திய பிராண்டுகளுக்கு விளம்பர மாடலாக இருந்திருக்கிறார்.
2019ஆம் ஆண்டு வெளியான கருப்பு கண்ணாடி படத்தின் மூலம் குயின்சி கோலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து சன் டிவியின் அன்பே வா சீரியலில், நீலவாணி கேரெக்டரில் நடித்து சின்னத்திரையிலும் அறிமுகமானார். இருப்பினும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் இவர் லைம் லைட்டிற்கு வந்தார்.

குயின்சி பிபி வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு, ராபர்ட் மாஸ்டரையும் சந்தித்தார். இப்போது குயின்சி விளம்பரம், போட்டோஷூட் என மிகவும் பிஸியாக இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“