Advertisment

நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3, புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
nokia6

நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியோ 3 ஆகிய ஸ்மார்ட்போன்களை எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisment

நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஆகிய போன்கள் மொபைல் ஸ்டோர்களில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நோக்கியா-3-யின் விலை ரூ.9,499 எனவும், நோக்கியா-5-ன் விலை ரூ.12,899 என்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நோக்கியா-6 ஸ்மார்ட்போனானது அமேசான் இணையதளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வருகிறது. அதன் விலை ரூ.14,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 16-ந் தேதி முதல் நோக்கியா-3 விற்பனைக்கு வருகிறது. நோக்கியா -5 ஸ்மார்ட்போனனுக்கான முன்பதிவானது ஜூலை 7-ந் தேதி தொடங்குகிறது.

நோக்கியா-5 ஸ்மார்போன் ஜூலை மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு ஜூலை 14-ந் தேதி தொடங்குகிறது.

நோக்கியா 6

5.5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போனாது சூரிய ஒளியிலும் திரையில் இருப்பதை காணமுடியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை 16 எம்பி மற்றும் 8 எம்பி என வடிவமைக்கப்பட்டுள்ளது. 3000எம்ஏஎச் பேட்டரி திறனுடன், மைக்ரோ யூஎஸ்பி சார்ஜர் போர்ட் உள்ளது.

மேலும், ஜி சென்சார், லைட் சென்சார், இ-காம்பஸ், ஹால் சென்சார், ஃபின்கர்ப்ரிண்ட் சென்சார், கிரையோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார், வை-பை, ப்ளூடூத் 4.1 உள்ளிட்ட பல்வேறு சிறப்பசங்களை கொண்டிருக்கிறது. குவால்காம் ஸ்னாப் டிராகன் 430 பிராசஸ்சருடன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ்(120 ஜிபி எக்ஸ்பான்டபிள்) ஆகியவை இந்த போனில் அடக்கம். மேலும், ஆடியோவை பொறுத்தவரை டொல்ஃபி ஆடோம் மற்றும் டுயல் ஸ்பிக்கர் உள்ளது.

ஆர்ட் பிளாக் கலரில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்ரோடேஜ் கொண்ட லிமிடட் எடிசன் போனையும் அறிமுகப்படுத்தவுள்ளது. ஆனால், அந்த போன் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பதில் தான் சந்தேகம் நிலவுகிறது.

நோக்கியா 5

நோக்கியா 5 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை 5.2 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. சூரிய ஒளியில் போனின் திரையை காணும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது என எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

நோக்கியா-6 ஸ்மார்ட்போனைப்போல நோக்கியா 5 போனும் குவால்காம் ஸ்னாப் டிராகன் 430 பிராசஸரை கொண்டுள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. 128 ஜிபி வரை எக்ஸ்பான்டபிள் செய்யமுடியும்.

nokia5

கேமரா 13 எம்பி மற்றும் 8 எம்பி ஆகும். பேட்டரியை பொறுத்தவரையில் நோக்கியா 6-க்கு கொடுக்கப்பட்டுள்ள அதே 3000 எம்ஏஎச் திறன் தான் இந்த நோக்கியா-5-க்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சென்சாரைப் பொறுத்தவரை ஜி சென்சார், லைட் சென்சார், இ-காம்பஸ், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், ஹால் சென்சார், கிரையோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார், என்எப்சி ஷேரிங் ஆகியவை உள்ளன.

நோக்கியா 5 ஸ்மார்ட்போனில் சீங்கிள் ஸ்பீக்கர் ஆடியோவை கொண்டிருக்கிறது. 4ஜி நெட்வொர்க் பயன்படுத்தமுடியும்.

நோக்கியா 3

பட்ஜெட் போனாக கருதப்படும் நேக்கியா 3 பிளாஸ்டிக் உடலமைப்பை கொண்டிருக்கிறது. 5 இன்ச் எச்டி டிஸ்பிளே, 2 ஜிபி ரேம், மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை வழங்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 128 ஜிபி வரை எக்ஸ்பான்டபிள் செய்து கொள்ள முடியுமாம்.

முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என 8 எம்பி கேமரா , 2650 எம்ஏஎச் பேட்டரி, வைபை, ப்ளூடூத், மற்றும் 4 ஜி நெட்வொர்க் சப்போர்ட் ஆகியவை உள்ளன.

nokiaphones

ஜி சென்சார், லைட் சென்சார், இ-காம்பஸ், கிரையோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார், என்எப்சி ஷேரிங் ஆகிய சிறப்பம்சங்களும் உள்ளன.

தற்போது இந்த நோக்கியாவின் மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்ட் 7 இயங்குதளத்தில் செயல்படும் என்றும் வரும் காலங்களில் அது ஆண்ட்ராய்ட் ஓ-விற்கு அப்டேட் செய்யப்படும் என எச்எம்டி நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Nokia 6 Nokia 3
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment