புத்தாண்டில் மட்டும் 4 லட்சம் குழந்தைகள்! 2019 ஆண்டில் இந்தியா செய்த சாதனை!

கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் இந்தியாவே முதலிடத்தில்

புத்தாண்டு தினமான நேற்று இந்தியாவில் மட்டும் 69 ஆயிரத்து 944 குழந்தைகள் பிறந்துள்ளனர். கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் இந்தியாவே முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் முக்கிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2019ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் மட்டும் உலகம் முழுவதும் 3,95,000க்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 70,000 குழந்தைகள் பிறக்கும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றைய புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் 3,95,072 குழந்தைகள் பிறந்துள்ளன.

இதில் பாதிக்கும் மேலான எண்ணிக்கையை இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகள் பெற்றுள்ளன. இந்தியாவில் 69,944 குழந்தைகளும், சீனாவில் 44,940, நைஜீரியாவில் 25,685, பாகிஸ்தானில் 15,112, இந்தோனேசியாவில் 13,256, அமெரிக்காவில் 11,086, காங்கோ குடியரசில் 10,053, வங்கதேசத்தில் 8,428 குழந்தைகள் பிறந்துள்ளதாக பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரியாக 12 மணியை அடைந்தவுடன் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் மட்டும் 168 குழந்தைகள் பிறந்துள்ளன. உலகில் மிகவும் வளர்ச்சியடையாத பகுதிகளில் 90% பிரசவங்கள் நிகழ்வதாக கூறப்பட்டுள்ளது. அதில் 20 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரே நாளில் இறந்து விடுகின்றன. 26 லட்சம் குழந்தைகள் ஒரு வாரத்திற்குள் உயிரிழப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close