Advertisment

”டைமென்சியா” ஆபத்துகளை குறைக்கும் நம்பிக்கையான துணை!

ஆரோக்கியமான வாழ்வினை வாழ்பவர்கள் பலரும் அல்ஜெய்மர் அல்லது டைமென்சியா போன்ற நோய்களின் தாக்கத்திற்கு ஆளாகாமல் வாழ்கின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
”டைமென்சியா” ஆபத்துகளை குறைக்கும் நம்பிக்கையான துணை!

An optimistic partner can reduce your risk of dementia :  மகிழ்ச்சியான துணைவர் நல்ல நண்பராக மட்டும் இருப்பதில்லை. ஆரோக்கியான வாழ்வுக்கும் அவர் ஆதாரமாக இருப்பார் என்கிறது ஆராய்ச்சிகள். மிச்சிகன் மாகாண யுனிவர்சிட்டி மற்றும் ஹார்வேர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் கல்வி நிறுவனங்கள் வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகள் நமக்கு இந்த தகவல்களை வழங்குகிறது.

Advertisment

மகிழ்ச்சியான, நம்பிக்கையான துணை உங்களுக்கு இருந்தால் உங்களின் முதுமையான காலத்தில் டைமென்சியா போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறியுள்ளது இந்த ஆராய்ச்சி. மேலும் ஆரோக்கியமான உணவுகள், உடற்பயிற்சி, சோசியல் என்கேஜ்மெண்ட் போன்றவையும் உங்களின் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று கூறுகிறது இந்த ஆராய்ச்சி முடிவுகள்.

'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!

மேலும் படிக்க : மொரட்டு சிங்கிள்ஸ்க்கு ‘கருப்பு’ தோசை… காதலர் தினத்தில் எங்கே கிடைக்கும் இந்த ஸ்பெஷல் தோசை?

4,457 தம்பதிகளிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. 8 ஆண்டுகளாக நடைபெற்ற ஆராய்ச்சியின் போது “ஒருவரின் வாழ்க்கை துணை சுற்றி நடக்கும் விசயங்களை பாசிட்டிவான ஆடிட்டிட்யூடன் ஏற்றுக் கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாகவும், ஆரோக்கியமாகவும், அதே சமயத்தில் நல்ல நினைவுகளை மனதில் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்கும் படியும் அமையும் என்று அந்த ஆராய்ச்சி முடிவுகள் கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

நாம் நம்முடைய பெற்றோர்களுடன் அதிக நேரம் செலவிடுவோம். அவர்கள் நம்மை உடற்பயிற்சி செய்யவும், ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும் எப்போதும் வலியுறுத்திக் கொண்டே இருப்பார்கள். இவர்களின் இந்த வலியுறுத்தல் தான் நாம் நீண்ட காலமாக  வாழவும், நோய்களில் இருந்து தப்பித்து செல்லவும் உதவும் என்கிறார் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் மனநலத்துறை துணைப் பேராசிரியர் வில்லியம் சாப்பிக்.

ஆரோக்கியமான வாழ்வினை வாழ்பவர்கள் பலரும் அல்ஜெய்மர் அல்லது டைமென்சியா போன்ற நோய்களின் தாக்கத்திற்கு ஆளாகாமல் வாழ்கின்றனர். அதே நேரத்தில் ஆரோக்கியமான உடல் எடை மற்றும் பிசிக்கல் ஆக்டிவிட்டியுடன் சேர்த்து மகிழ்ச்சிகரமான வாழ்க்கை துணையும் இந்த நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

Healthy Life Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment