Advertisment

ஆரஞ்சு தோல் இருக்கா? வைட்டமின் சி ஆயில் இப்படி பண்ணுங்க

உங்கள் சருமம் புத்துயிர் பெற, உங்கள் தோல் பராமரிப்புப் பொருட்களில் வைட்டமின் சி அவசியம் இருக்க வேண்டும்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

Vitamin C oil

வைட்டமின் சி சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. இது, சுற்றுச்சூழலினால் ஏற்படும் பாதிப்புகள், மந்தமாக தோற்றமளிக்கும் சருமத்தில் இருந்து குணப்படுத்தி, உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறது.

Advertisment

வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது செல் சேதத்தை சரிசெய்ய உதவுகிறது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

எனவே உங்கள் சருமம் புத்துயிர் பெற, உங்கள் தோல் பராமரிப்புப் பொருட்களில் வைட்டமின் சி அவசியம் இருக்க வேண்டும். வைட்டமின் சி எண்ணெய் நீங்களே வீட்டில் எளிதாக தயாரிக்கலாம், எப்படி என்பது இங்கே

தேவையான பொருட்கள்

1 – ஆரஞ்சு தோல்

1/2 கப் – வர்ஜின் தேங்காய் எண்ணெய்

செய்முறை

publive-image

ஆரஞ்சு தோலை அரைக்கவும். இது நன்றாக அரைக்க வேண்டியதில்லை. ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும். சிறிது சூடு ஆறியவுடன், ஆரஞ்சு தோல் பொடியை சேர்த்து கிளறவும்.

கொதிக்க ஆரம்பித்தவுடன் எண்ணெய் லேசாக ஆரஞ்சு நிறமாக மாறுவதை நீங்கள் கவனிப்பீர்கள். இந்த கட்டத்தில் தீயை அணைக்கவும். இப்போது ஒரு காற்று புகாத பாட்டிலில் எண்ணெயை வடிகட்டி, குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.

நீங்கள் தூங்கச் செல்லும் முன் இந்த எண்ணெயைத் தடவலாம் – மசாஜ் செய்யலாம் அல்லது சீரம் தடவிய பிறகு உங்கள் முகத்தில் தடவலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment