Advertisment

சட்டெனத் தயாராகும் ஆரோக்கியமான பச்சை பயிறு பருப்பு சாதம்!

Pachai Payiru Sadham சுவை மட்டுமல்ல இது உடலுக்கு ஆரோக்கியமானதும்கூட.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pachai Payiru Sadham Green Moong Dal Rice Lunch Recipes Tamil News

Pachai Payiru Sadham Green Moong Dal Rice Lunch Recipes Tamil News

Green Moong Dal Rice Recipe Tamil News : எப்போதும் ஒரே போன்ற பருப்பு, சாம்பார் சாதம் வைத்து சலித்துப்போனவர்களுக்கு நிச்சயம் இந்த  பச்சை பயிறு பருப்பு சாதம் வித்தியாச சுவையைக் கொடுக்கும். சுவை மட்டுமல்ல இது உடலுக்கு ஆரோக்கியமானதும்கூட. சட்டென ரெடியாகும் இந்த லன்ச் பாக்ஸ் ரெசிபியை எப்படி செய்வது என்பதை இனி பார்க்கலாம்.

Advertisment

தேவையான பொருள்கள் :

முழு பச்சை பயிறு - 1/2 கப்

அரிசி - 1 கப்

கடுகு - 1 டீஸ்பூன்

பூண்டு - 3 பற்கள்

கறிவேப்பிலை - 1 கைப்பிடி

பச்சை மிளகாய் -1

தக்காளி - 1

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

பச்சை பயிறு பருப்பு மற்றும் அரிசியை நன்கு கழுவி அதனை 30 நிமிடம் ஊற வைக்கவும்.

ப்ரெஷர் குக்கரில், நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து, கடுகு, பெருங்காயத்தூள், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி, மஞ்சள் மற்றும் சிவப்பு மிளகாய்த் தூள் சேர்க்கவும்.

தக்காளி மென்மையானதும், ஊறவைத்த பருப்பு மற்றும் அரிசி, தண்ணீர் மற்றும் உப்பு கலவையை சேர்க்கவும்.

குக்கரை மூடி போட்டு, 3 முதல் 4 விசில் வரை சமைக்கவும்.

ஆரோக்கியமான பச்சை பயிறு சாதம் ரெடி. நெய்யுடன் சூடாகப் பரிமாறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment