Advertisment

அனிதா குப்புசாமி வீட்டில் பந்தகால் விழா.. போட்டோஸ் வைரல்!

அனிதா குப்புசாமி வீட்டில் சமீபத்தில் பந்தகால் விழா நடந்தது. அந்த புகைப்படங்களை பல்லவி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pushpavanam Kuppusamy

Pandhakkal function celebrated in Pushpavanam Kuppusamy house photos viral

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கிராமிய மற்றும் சினிமா பாடகர் புஷ்பவனம் குப்புசாமி. இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவரது மனைவி அனிதாவும் பிரபல கிராமிய பாடகி தான்.

Advertisment

குப்புசாமி- அனிதா தம்பதியினர் இதுவரை சினிமா, மேடை நிகழ்ச்சிகள், டிவி நிகழ்ச்சிகள் வெளிநாடு என பல இடங்களில் பாடியுள்ளனர். தங்கள் பாடல்கள் வழியாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த தம்பதிக்கு பல்லவி, மேகா என்ற இரு மகள்கள் உள்ளார்கள்.

இதில் மூத்த மகள் பல்லவி, சென்னையில் பல் மருத்துவராக பணி புரிகிறார். இவருக்கும், ஐடி நிபுணரான கௌதம் ராஜேந்திர பிரசாத்துக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகியது.

மேலும் மகளின் திருமணம் அன்று நடந்த நிகழ்வுகளை அனிதா தனது யூடியூபில் நேரலையாக பதிவிட்டார். சமீபத்தில்’ பல்லவி தனது கணவருடன் துபாய் நாட்டுக்கு ஹனிமூன் சென்ற புகைப்படங்கள், வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்தார்..

இந்நிலையில் பல்லவி திருமணத்தை முன்னிட்டு வீட்டில் பந்தகால் விழா நடந்தது. அதில் புஷ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி, பல்லவி, அவர்களது உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அந்த புகைப்படங்களை பல்லவி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.  அவை இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment