Advertisment

தூர்தர்ஷனில் முதல் சீரியல்.. வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் சுஜிதாவை தெரியாதவர்கள் இல்லை!

சத்யராஜ், சீரஞ்சி, கார்த்திக் என எல்லா மொழி ஹீரோக்களுடனும் குழந்தை பருவத்தில் நடித்திருக்கிறார்

author-image
WebDesk
New Update
pandian stores dhanam vijay rv pandian stores

pandian stores dhanam vijay rv pandian stores

pandian stores dhanam vijay rv pandian stores விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் என்ற கேரக்டரில் சுஜிதா நடித்து வருகிறார். இவர் திரைப்பயணத்தில் 36 ஆண்டுகள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

Advertisment

41 மாத குழந்தையாக இருந்த போதே ஒரு திரைப்படத்தில் கே ஆர் விஜயாவின் பேரக்குழந்தையாக நடித்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத தகவல். கலை துறையில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து இன்றளவும் வெற்றிக்கொடி நாட்டி வரும் சுஜிதாவின் அன் சீன் புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க.

தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு பெண்ணின் கதை என்ற தொடர் தான் இவரின் முதல் சின்னத்திரைஅறிமுகம். அதன்பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் இவர் நடித்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரமான தனம் என்ற கேரக்டரில் தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சத்யராஜ், சீரஞ்சி, கார்த்திக் என எல்லா மொழி ஹீரோக்களுடனும் குழந்தை பருவத்தில் நடித்திருக்கிறார். இத்தனை வருட பயணத்தில் ஒருமுறை கூட எந்தவித சர்ச்சையிலும் சுஜிதா சிக்கியது இல்லை.முந்தானை முடிச்சு என்ற தமிழ் திரைப்படத்தில் 1983இல் நடித்திருந்த குழந்தை நட்சத்திரமும் இவர்தான். தொடர்ந்து 1987 மற்றும் 1988 இல் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி அவார்டை பெற்றிருக்கிறார்.

இவரது கணவர் ஒரு விளம்பர பட டைரக்டர் ஆவார். இவரது பூர்வீகம் திருவனந்தபுரம் இவர் அடிப்படையில் ஒரு மலையாளி.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment