Advertisment

2 லட்சம் ரூபாய்... விஜய் டிவி நடிகை வாங்கிய ஃப்ரிட்ஜ்: அதுல அப்படி என்ன இருக்கு?

இதுல பிரிட்ஜ் டெம்பரேச்சர், பிரீசர் டெம்பரேச்சர், வைஃபை கனெக்ஷன், சைல்ட் லாக் ஆப்ஷன் இப்படி நிறைய இருக்குது.

author-image
WebDesk
New Update
LG 674 Litres Refrigerator

LG 674 Litres Refrigerator

இப்போது சீரியல், டிவி செலிபிரிட்டீஸ் எல்லாருமே ஹோம் டூர், கிச்சன் டூர், பிரிட்ஜ் டூர் வீடியோ போடுவது ஃபேஷனாக உள்ளது.

Advertisment

அப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா, தன்னுடைய ஹேமாஸ் டைரீ யூடியூப் சேனலில், வீட்டில் புதிதாக வாங்கியிருக்கும் ஃபிரிட்ஜ் டூர் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்த பலரும் இப்போது வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதற்கு காரணம் அந்த ஃபிரிட்ஜில் விலைதான்.

ஹேமா புதிதாக வாங்கியிருக்கும் எல்ஜி பிராண்ட் ஃபிரிட்ஜ் விலை 2 லட்சம் ரூபாய். அப்படி இந்த ஃபிரிட்ஜில் என்ன அம்சங்கள் இருக்கிறது? இதோ ஹேமாவே சொல்கிறார்.

இது எல்.ஜி.பிராண்ட் டபுள் டோர் ஃபிரிட்ஜ், இந்த டோர்ல லைட்டா ரெண்டு முறை தட்டுனா லைட் எரியும், உள்ளே என்னென்ன இருக்குதுனு நம்ம பாத்துக்கலாம் அதேபோல இன்னொரு முறை தட்டுனா லைட் அணைஞ்சிடும்.

அடிக்கடி ஃபிரிட்ஜ் டோர் திறந்தா, கூலிங் போயிடும். அதுக்காகவே இதுல ஒரு சைட் ஃபிரிட்ஜ், இன்னொரு சைட் ஃப்ரீசர் கொடுத்துருக்காங்க. உங்களுக்கு அடிக்கடி தேவைப்படுற பொருட்களை ஃபிரிட்ஜ் சைட்ல வச்சுக்கலாம்.

ஃபிரிட்ஜ் சைட்ல முதல் ரேக்ல சமையலுக்கு தேவையான, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சுபூண்டு பேஸ்ட் வச்சுருக்கோம். அதுக்கு கீழே கூல்டிரிங்ஸ் இருக்குது. அடுத்த ரேக்ல மதியானம் சமைச்சு மீந்து போன சாப்பாடு,  அதுக்கும் கீழே மாவு டப்பா எல்லாமே இருக்குது.

அதுக்கு கீழே காய்கறிக்கு ரெண்டு கண்டெய்னர் இருக்குது. அதுல ஒன்னுல காய்கறி வச்சுட்டு, இன்னொரு கண்டெய்னர்ல பழங்கள் எல்லாம் வச்சுருக்கோம்.

அதேபோல டோர் சைட்ல 4 ரேக்ஸ் கொடுத்துருக்காங்க. முதல் ரேக்ல பால், சாக்லேட்ஸ், அடுத்ததுல மசாலா, சாஸ், ஜாம் இருக்கு. 3வது ரேக்ல டேட்ஸ், இஞ்சிலாம் இருக்கு. கீழே உள்ள ரேக்ல சாக்லேட், ஸ்வீட்ஸ் எல்லாம் வச்சுருக்கோம்.

நம்ம பழைய ஃபிரிட்ஜ்ல பட்டன்ல வச்சு டெம்பரேச்சர் கண்ட்ரோல் பண்ணுவோம். ஆனா இந்த ஃபிரிட்ஜ்ல நீங்க டச் பண்ணி கண்ட்ரோல் பண்ணிக்கலாம். இதுல பிரிட்ஜ் டெம்பரேச்சர், பிரீசர் டெம்பரேச்சர், வைஃபை கனெக்ஷன், சைல்ட் லாக் ஆப்ஷன் இப்படி நிறைய இருக்குது.

இந்த எல்.ஜி பிராண்ட் பாக்கிறதுக்கு முன்னாடி நாங்க சாம்சங் பிரிட்ஜ்தான் பார்த்தோம். அது 2000 ரூபாய் கம்மியாதான் இருந்தது. அதுல டோர்ல ஒரு டிஸ்பிளே இருக்கும். அதுல யூடியூப் எல்லாமே பிளே பண்ணிக்கலாம். பிரிட்ஜ்க்குள்ள ஒரு கேமிரா வச்சுருப்பாங்க. அந்த காமிரா வழியா உள்ளே என்னென்ன பொருட்கள் இருக்குனு பாத்துக்கலாம். மத்தபடி ஒரு நார்மல் ஃபிரிட்ஜ்ல இருக்கிறதுதான் அந்த சாம்சங் ஃபிரிட்ஜ்லயும் இருந்தது.

ஆனா, இந்த பிரிட்ஜ்ல அதைவிட நிறைய ஃபேஸிலிட்டிஸ் இருந்தது. இதுல யுவி லைட் இருக்கு. நாம பழங்கள், காய்கறிகள் எல்லாம் வாங்கிட்டு வந்து அப்படியே வச்சுடுவோம். அதுல இருக்க கிருமிகள் எல்லாத்தையும் அந்த யுவி லைட் கொன்னுடும்.

இந்த ஃபிரிட்ஜ்ல ஹைஜின் ஃபிரெஷ் பிளஸ் ஆப்ஷன் இருக்கு. நம்ம வைக்கிற பொருளுக்கு எந்த டெம்பரேச்சர் தேவையோ அதை, ஃபிரிட்ஜை ஆட்டோமெட்டிக்கா செட் பண்ணிக்கும். ஒருவேளை ஏதாவது பழம், காய்கறி கெட்டுப்போச்சுனா கூட ஃபிரிட்ஜ்ல ஸ்மெல் பரவாது.

அடுத்ததா பிரீசர் சைட்ல, வெளியே ஒரு டிஸ்பென்சர் இருக்கும். இதுல உங்களுக்கு டிஃபால்டாவே, ஐஸ் வாட்டர், கிரஷ்ட் ஐஸ், ஐஸ் கியூப் வரும். இது எல்லாமே யுவி பாதுகாப்போட வர்றதால தண்ணீர்ல கிருமிகள் இருக்காது. பிரீசர் சைட்ல 3 ரேக், 2 பாக்ஸ் கொடுத்துருக்காங்க. இதுல நம்ம ஃபிரோஸன் ஐட்டம்ஸ் ஸ்டோர் பண்ணிக்கலாம். நாம இதுல நட்ஜெஸ்ட்ஸ், ஃபிரென்ஞ் ஃபிரைஸ், பன்னீர், ஸ்வீட் கார்ன், பட்டர், சீஸ் வச்சுருக்கோம். டோர்ல கூட ரேக்ஸ் கொடுத்துருக்காங்க. இதுல நீங்க ஐஸ்கிரீம்ஸ் வச்சுக்கலாம்.

இந்த ஃபிரிட்ஜ் ஓட ஒரிஜினல் விலை 1, 87,000 ருபாய். ஆடி ஆஃபர் எல்லாம் போக 1,67.000 ரூபாய்க்கு இதை வாங்கினோம். 5 வருஷ வாரண்டியும் இருக்கு. இப்போ ஒரு பிரிட்ஜ் வாங்குணா, 15 வருஷத்துக்காவது யூஸ் பண்ணுவோம், இந்த பிரிட்ஜ் அவ்ளோ நாளைக்கு உழைக்கும்னுதான் இவ்ளோ விலை கொடுத்து வாங்கிருக்கோம் என்று முடிக்கிறார் ஹேமா ராஜ்குமார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment