மேக்-அப் இப்படிதான் ரிமூவ் பண்ணனும் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா பியூட்டி டிப்ஸ்!

Pandian Stores Hema Beauty Tips இப்படிச் செய்வதனால், வறண்டு தோல் உரியும் பிரச்சனை நீங்கும்

Pandian Stores Hema Skincare Secrets Beauty Tips Tamil
Pandian Stores Hema Skincare Secrets Beauty Tips Tamil

பல மாதங்களாக நெடுந்தொடர் வரிசையில் முன்னணியில் இருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா, ஷூட் முடிந்தபிறகு மேக்-அப்பை எப்படி அகற்றுவார் என்பது பற்றிய காணொளி ஒன்றை தன் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார். பலருக்கும் தெரியாத பல வழிமுறைகளை இதில் பகிர்ந்திருக்கிறார். அதிலும் குறிப்பாக வறண்ட சருமம் உடையவர்களுக்கு இந்த டிப்ஸ் நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

Pandian Stores Hemaraj

“முகத்தில் இருக்கும் மேக்-அப் ரிமூவ் பண்ணுவதற்கு முன்பு முதலில் உதட்டில் இருக்கும் லிப்ஸ்டிக்கைதான் அகற்றவேண்டும். எனக்கு வறண்ட உதடு என்பதால், தினமும் நான் ஸ்க்ரப் செய்வேன். இப்படிச் செய்வதனால், வறண்டு தோல் உரியும் பிரச்சனை நீங்கும். ஸ்க்ரப் செய்து லிப்ஸ்டிக், இறந்த செல்கள் முதலியவற்றை அகற்றி சுத்தம் செய்துகொள்ளலாம்.

Hemaraj Beauty Secrets

பிறகும், முகத்தில் இருக்கும் மேக்-அப்பை அகற்ற, தேங்காய் எண்ணெய் அல்லது க்ளென்சிங் மில்க் பயன்படுத்துவேன். பொதுவாகத் தேங்காய் எண்ணெய்  உபயோகித்தால், நம் சருமத்தின் நிறம் மாறுபடும். குட்நைட் கண்டு அஞ்சவேண்டாம். முகத்தைக் கழுவினால் உண்மையான நிறத்திற்கு சருமம் திரும்பும்.  ஆனால்,மேக்-அப் அகற்றத் தேங்காய் எண்ணெய்யைப் போன்ற சிறந்த ரிமூவர் எதுவுமில்லை.

Pandian Store Hema Photos

க்ளென்சிங் மில்க் பயன்படுத்தினால், இரண்டு முறை செய்யவேண்டும். சிறிதளவு மில்க் எடுத்துக்கொண்டு முகம் முழுக்க அப்ளை செய்து, ஈரமான டிஷ்யூ பயன்படுத்தி மேக்-அப்பை அகற்றலாம். இதனைத் தொடர்ந்து, நான் எக்ஸ்ஃபோலியேட்டர் பயன்படுத்துவேன். இது சருமத்தில் மீதமிருக்கும் மேக்-அப் துகள்களை அடியோடு நீக்கும்.

இதற்கு பிறகுதான், ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகம் கழுவுவேன். இப்படிச் செய்தாலே போதும் முகம் ஃப்ரெஷாக இருக்கும். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை முகத்தை ஸ்க்ரப் செய்யலாம். வெளியே எங்காவது மேக்-அப் இல்லாமல் செல்லவேண்டும் என்றால், கொஞ்சம் லிப் பாம், முகத்தில் ரோஸ் டோனர், லோஷன் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தினாலே போதும். வறண்ட சருமம் உள்ளவர்கள் இதனை பின்பற்றினாலே போதும்”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pandian stores hema skincare secrets beauty tips tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com