Advertisment

உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் குழி பணியாரம்.. செம்மயா இருக்கும்!

சுவையான தென்னிந்திய சிற்றுண்டிதான் குழி பணியாரம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
paniyaram recipe tamil paniyaram recipe

paniyaram recipe tamil paniyaram recipe

Paniyaram recipe tamil, paniyaram recipe : தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை - தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான உணவுகள் எல்லா நேரத்திலும் பிடித்த தேர்வாக அமைகின்றன. ஒவ்வொரு உணவிலும் சில தனித்துவமான உணவுகள் உள்ளன. அத்தகைய ஒரு சுவையான தென்னிந்திய சிற்றுண்டிதான் குழி பணியாரம்.எப்படி செய்வது என பார்க்கலாமா?

Advertisment

paniyaram recipe tamil : செய்முறை!

ச்சரிசி மற்றும் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து நைஸாக அரைக்கவும். அரைக்கும்போது, 10 நிமிடம் ஊற வைத்த ஜவ்வரிசியை மாவுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி, 5 மணி நேரம் புளிக்கவிடவும்.

வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். குழி பணியார சட்டியை சூடாக்கி, சிறிது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுத்தால், சுவையான குழிபணியாரம் தயார்.

இனிப்பு: பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து நைஸாகவும், கெட்டியாகவும் அரைத்து எடுக்கவும். இந்த மாவில் கொஞ்சம் வெல்லம் பாகு எடுத்து வடித்து அதனை மாவி சேர்த்து இனிப்பு பணியாரம் செய்யலாம். இதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து செய்வதால், நல்ல வாசனையுடன் இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment