Advertisment

பருப்பு உருண்டை குழம்பு.. அடிச்சிக்கவே முடியாது!

பருப்பு உருண்டை குழம்பு உங்களில் யாருக்கு செய்யத் தெரியும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
paruppu urundai kuzhambu in tamil paruppu urundai kuzhambu recipe

paruppu urundai kuzhambu in tamil paruppu urundai kuzhambu recipe

paruppu urundai kuzhambu paruppu urundai kuzhambu in tamil : அனைவருக்கும் பிடித்த பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்

Advertisment

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு - 1 கப்

சோம்பு - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3

கறிவேப்பிலை - 1 கொத்து

பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 2

உப்பு - தேவையான அளவு

குழம்புக்கு :

சின்ன வெங்காயம் - 15

தக்காளி - 2

தேங்காய் துருவல் - 1/2 கப்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

சாம்பார் தூள் / (மிளகாய் தூள்+மல்லிதூள்) - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 டி ஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

பூண்டு - 5 பல்

கறிவேப்பிலை - 1 கொத்து

புளி - நெல்லிக்காய் அளவு

செய்முறை :

* சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடலை பருப்பை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறிய பிறகு அதில் காய்ந்த மிளகாய், சோம்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்(நெய்சாக அரைக்க கூடாது இல்லை என்றால் உருண்டை இருகி விடும்).

* பெரிய வெங்காயத்தை(பாதி) பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் சேர்த்து உருண்டையாக தட்டவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை சிவக்க வதக்கிய பிறகு அதில் தக்காளி ஒன்றையும் சேர்த்து நன்றாக வதக்கி ஆற விடவும்.

* நன்றாக ஆறியவுடன் சோம்பு, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸ்யில் அரைக்கவும்.

* அரைத்த கலவையை புளி தண்ணீரில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

* மற்றொரு கடாயில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பூண்டு, மீதியுள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

* பிறகு சாம்பார் தூளையும் சேர்த்து வதக்கவும் (சாம்பார் தூளுக்கு பதில் மிளகாயும், மல்லி தூளும் சேர்க்கலாம்) குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒன்றின் பின் ஒன்றாக போடவும். உருண்டை முக்கால் பதம் வெந்ததும் கரைத்து வைத்திற்கும் மசாலா புளிக்கலவையை சேர்க்கவும். உருண்டைகளை திருப்பி விட்டு மேலும் 5 நிமிடம் வேகவைத்து அடுப்பை அணைக்கவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment