Parupu Rasam Dal Rasam Recipe Tamil : தினமும் ஒரேபோன்ற ரசம் வைத்து சலித்துவிட்டதா? மிகவும் எளிதாக, வித்தியாசமாக இந்த பருப்பு ரசம் செய்து பாருங்கள். மீண்டும் மீண்டும் ருசிக்கத் தூண்டும்.
மசாலா கலவைக்குத் தேவையான பொருட்கள் :
கொத்தமல்லி விதைகள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - ¾ டீஸ்பூன்
வெந்தயம் - ¼ டீஸ்பூன்
உலர்ந்த சிவப்பு மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
மற்ற பொருட்கள்:
நெய் / தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம்- 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உலர்ந்த சிவப்பு மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டு - 3 பற்கள்
தக்காளி (நறுக்கியது) - 1
புளிச் சாறு - 1 கப்
கீறிய பச்சை மிளகாய் - 1
மஞ்சள் - ½ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வேகவைத்த துவரம் பருப்பு - 2 கப்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி (நறுக்கியது) - ஒரு கைப்பிடி
செய்முறை :
முதலாவதாக, மசாலா கலவையைத் தயாரிக்க சூடான கடாயில் கொத்தமல்லி விதைகள், சீரகம், மிளகு, வெந்தயம், உலர்ந்த சிவப்பு மிளகாய் மற்றும் சில கறிவேப்பிலை சேர்த்து மசாலா நறுமணமாக மாறும் வரை உலர்ந்த நிலையில் வறுக்கவேண்டும்.
இந்தக் கலவை முற்றிலும் குளிர்ந்ததும், தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் ஊற்றி, அது சூடானதும் அதில் கடுகு சேர்க்கவும்.
கடுகு வெடித்ததும், சீரகம், பெருங்காயத்தூள், உலர்ந்த சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்துக் குறைத்த தீயில் வதக்கவும்.
இப்போது தயாரிக்கப்பட்ட மசாலா கலவையைச் சேர்த்து மசாலா நறுமணமாக மாறும் வரை வதக்கவும்.
பிறகு, தக்காளி, புளிச் சாறு, பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து, அதனை மூடி 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
இப்போது, வேகவைத்த துவரம் பருப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறுதியாக, 2 டீஸ்பூன் கொத்தமல்லி சேர்த்து சூடான சாதத்துடன் பருப்பு ரசத்தைச் சேர்த்து சாப்பிடலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"