விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரணிகா தக்ஷூ. இப்போது ஜீ தமிழ் டிவியின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்கிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரணிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் பிரணிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு….!! என்று மிக நீளமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”நான்கு ஆண்டுகளுக்கு முன்பு…
லேசான மனதோடு பல எதிர்பார்ப்புகளுடன் ஒரு பயணம்! உறவுகளை மனதில் சுமந்து கொண்டு ஒரு தொலைதூர பயணம்! அறியாத இடத்திற்கு பயணிக்கும் மாணவன் போல!!! புரியாத புதிர்களோடு ஒரு புதிய நகரம் இந்த பயணம் கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை என்றால் என்னவென்று..!!!
பல கனவுகளுடன் நான், அம்மா, நல்லா வருவே கண்ணா என்று எந்த எதிர்பார்ப்புமில்லா பாட்டி, எதிர்காலமே நான் என்று பயணப்படும் என் தங்கை, வெற்று கையில் நிறைய நம்பிக்கையோடு சென்னை பயணம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு…!!!
நான் பயணித்த பேருந்து மட்டும்அலட்டி கொள்ளாமல் பயணித்தது… அயர்ந்து போனேன் கண்கள் தேடும் இறங்கும் இடம் வந்ததோ…. மனம் தேடும் இன்னும் சில நேரம் இந்த பயணம் நீடிக்க ஏங்கும் …பயணத்தூரம் தெரியவில்லை சற்றே இளைப்பாறுதல் இதம்தரும் என்றே…..!!!!!!!
பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.. என் ஜன்னல் ஓரப் பயணங்கள் காற்றோடு கடந்த காலத்தையும் கிசுகிசுகின்றன..!!!
அக்கறையாக அந்த இரவு பொழுதை பலர் உறக்கத்திலே உறைந்தனர் சிலர் அலைபேசியில் அலற்றினர் நானும் ஓட்டுனரும் மட்டும் பொறுப்பாய் ஓட்டினோம்… ஓட்டுனர் வண்டியை ஓட்டினார்
நான் என் நினைவுகளை ஓட்டினேன்…!!!🦋🍃
நெரிசல் இல்லா பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் இருக்கை அமைந்துவிட்டால் பயணம் கசக்கவா செய்யும்… இனிமையான தென்றல்… கருமை சூழ்ந்த வானத்தில் ஒற்றை விளக்காய் நிலவு.. மெல்லிசை ஒலியில் ஊஞ்சலாய் மிதந்து போகும் பேருந்து… தூக்கம் தழுவாத விழிகள்…இரைச்சல் இல்லாத அக்கம்பக்கம்… இருளிலும் நிழலாய் எதிர்புறத்தில் ஓடி கொண்டிருக்கும் பசுமையான மரங்கள்… காற்றோடு கலந்த சின்ன சின்ன தூறல்… கைகள் இறுக்கமாக அணைத்துக்கொண்டு தலை பதிக்க நினைத்து பார்த்து சிரிக்கும்படியான சில இனிய நினைவுகள்.. இவை அத்தனையையும் ரசித்து கிறங்கும் கவித்துவமான மனது…
பயணப்பட்டேன்….
போன பாதைகள் எல்லாம் பெருமிதமாய் வரும் பாதைகள் எல்லாம் புதிராய் இருக்க விறுக்கென விழித்தேன் “சென்னை எல்லாம் இறங்கிக்கோ” என்ற சப்தத்தில் இந்த தடவை எட்டி பார்க்கவில்லை ஏனென்றால் கத்தியது நடத்துனர் இருந்தாலும் எட்டி பார்த்தேன் “சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது”
இந்த பயணம் தொடர்கிறது நான்கு ஆண்டுகளாக சிங்கார சென்னையில்…!!!
சந்தோஷம் நிறைய நிறைய மீண்டும் தொடரும் இப்பயணம் பேருந்திலிருந்து கை அசைக்கும் சிறு பிள்ளை போல ……..,,,,,❤️🌿
இவ்வாறு பிரணிகா உணர்ச்சி பொங்க அதில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”