Advertisment

நீதான் எனக்கு எல்லாம்! காதலனை அறிமுகம் செய்த பிரணிகா தக்ஷு

பிரணிகா இன்ஸ்டாவில் தன் காதலன் உடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
pranika dhakshu

pranika dhakshu

சீரியல் நடிகை பிரணிகா தக்ஷு, பிரதாப் ஜனாவின் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான கால் கிலோ காதல் என்ற குறும்படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார். அறம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.

Advertisment

பிரணிகா டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமானவர். பின்னர் இந்திய அரசாங்கம் அதை தடை செய்த போது, இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கி ரீல்ஸ்களை பதிவிட்டு வந்தார். உனக்கென்னபா யூடியூப் சேனலின் ஹலோ வெப்சீரிஸ், இனி ஒரு காதல் செய்வோம் மற்றும் வடசேரி ஆகிய படங்களிலும் பிரணிகா நடித்துள்ளார்.

இருந்தாலும் அவருக்கு புகழைத் தேடித் தந்தது விஜய் தொலைக்காட்சி தான். பாவம் கணேசன் சீரியலில், அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. மேலும் காமெடி ராஜா கலக்கல் ராணி ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் வினோத் பாபுவின் ஜோடியாக பங்கேற்று  காமெடியில் அசத்தினார். இப்போது விஜய் டிவியின் கனா காணும் காலங்கள், ஜீ தமிழ் டிவியின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்கிறார். டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியிலும், நாகராஜ் என்பவருக்கு ஜோடியாக ஆடுகிறார்.

publive-image

சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரணிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில், பிரணிகா இன்ஸ்டாவில் தன் காதலன் உடன் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அதில், நீதான் எனக்கு எல்லாம். நான் உன்னை ஒருபோதும் போக விடமாட்டேன், ஏனெனில் நீ இல்லை என்றால் என் வாழ்க்கை முழுமையடையாது என்று எனக்குத் தெரியும். நீ எப்போதும் வேண்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த காதல் ஜோடிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment