அமீர் பிரபல நடன இயக்குநர். பி ரபுதேவாவின் தீவிர ரசிகர். இவரது ஏடிஎஸ் க்ரூ ஊட்டி நடனக் குழு கிங்ஸ் ஆஃப் டான்ஸ், டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் மற்றும் இந்திய ஹிப்ஹாப் டான்ஸ் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு நடனப் போட்டிகளில் கலந்து கொண்டு பல விருதுகளை வென்றுள்ளது.
Advertisment
பிபி ஜோடிகள் சீசன் 1 நடன நிகழ்ச்சியிலும், அமீர் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும், ஒரு சில திரைப்படங்களுக்கும் இவர் கோரியோ செய்திருக்கிறார்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் அமீருக்கு மிகப்பெரிய அறிமுகம் கிடைத்தது. வீட்டுக்குள் நுழைந்த சில நாட்களிலே அமீர் காதல் புரோமோவிலும் இடம் பிடித்தார். இவர் பாவனியுடன் செய்யும் குறும்புகள் இணையத்தில் பயங்கர டிரெண்ட் ஆகியது. பிக்பாஸ் தொடர்ந்து, பிபி ஜோடிகள் சீசன் 2வில் கலந்து கொண்ட அமீர் பாவனி ஜோடி, ஃபைனல்ஸ் வரை வந்து, இறுதியில் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
Advertisment
Advertisement
அப்போது பாவனி தனது இன்ஸ்டாவில், சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, நடனம் எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது, அதுவும் ஒரு போட்டி நிகழ்ச்சியில் அடியெடுத்து வைப்பது இன்னும் பயமாக இருந்தது, ஆனால் நீங்கள் சிறந்த மாஸ்டர் என்பதை நிரூபித்தீர்கள், நடனமாட தெரியாதவரைக் கூட, நடனமாடச் செய்து, அவளை வெற்றி பெறச் செய்யத் தெரிந்தவர்.
இது உனக்கு மிகப்பெரிய பணி என்று எனக்குத் தெரியும். மேலும் இது ஒரு அற்புதமான பயணம், இதன் ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசிப்பேன். உன்னை அதிகம் தெரிந்து கொண்டேன், உன்னிடமிருந்து பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.
நீங்கள் ஒரு சிறந்த மாஸ்டர், சிறந்த நண்பர். எனவே இப்போது நாம் ஒன்றாக நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவோம். என் சிறந்த வாழ்க்கை துணையாகும், அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். அமீர் நீ என்றென்றும் என்னுடையவனாக இருப்பாய். ஐ லவ் யூ என்று கூறி, அமீருடனான தனது காதலை பாவனி உறுதிப்படுத்தினார்.
தொடர்ந்து பல இடங்களுக்கு இருவரும் ஜோடியாக சென்று வந்தனர். இந்த ஜோடி ரசிகர்களிடம் ஃபேமஸ் ஆனதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து சில விளம்பர படங்களிலும் ஒன்றாக நடித்தனர்.
இந்நிலையில் பாவனி பிறந்தநாளை முன்னிட்டு அமீரும், பாவனியும் துபாய் நாட்டுக்கு டூர் சென்றனர். அந்த போட்டோஸை அமீர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார்.
அதில், என் அன்பே, உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீ ஆச்சரியமாக இருக்கிறாய், நீ எப்போதும் என்னை மிகவும் மகிழ்ச்சியுடன் நிரப்புகிறாய்! அதனால் இன்றைக்காவது, நானும் அதையே உனக்கு செய்ய விரும்புகிறேன்! என மனமுருகி பதிவிட்டுள்ளார்.