Advertisment

கருப்பு மிளகு, வெந்தயம்.. பி.சி.ஓ.எஸ் பிரச்னையை சமாளிக்க ஆயுர்வேத நிபுணர் பரிந்துரை

ஆயுர்வேத மருத்துவர் டிக்ஸா பவ்சர் சவாலியா, பிசிஓஎஸ்ஸில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும் சில மசாலாப் பொருட்களை பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
lifestyle

இந்தியாவில் இனப்பெருக்க வயதுடைய 5 பெண்களில் ஒருவர் PCOS நோயால் பாதிக்கப்படுகிறார்

பிசிஓஎஸ் (பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்) என்பது ஒரு ஹார்மோன் கோளாறு ஆகும். இது ஒழுங்கற்ற மாதவிடாய், அதிகப்படியான உடல் முடி, தோல் பிரச்சினைகள், எடை அதிகரிப்பு மற்றும் பதட்டம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.

Advertisment

2021 ஆம் ஆண்டு ஜர்னல் ஆஃப் டயாபெட்டாலஜி கட்டுரையில், உலகளவில் பிசிஓஎஸ் பாதிப்பு 17-45 வயதுடைய பெண்களில் 5.5% முதல் 12.6% வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையுடன் ஆயுர்வேதத்தின் படி, உங்கள் உணவில் சில மசாலாப் பொருட்கள் சேர்ப்பது பிசிஓஎஸ் நிலைமையை நிர்வகிக்க உதவும். ஆயுர்வேத மருத்துவர் டிக்ஸா பவ்சர் சவாலியா, பிசிஓஎஸ்ஸில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும் சில மசாலாப் பொருட்களை பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவில் இனப்பெருக்க வயதுடைய 5 பெண்களில் ஒருவர் PCOS நோயால் பாதிக்கப்படுகிறார். இயற்கையான முறையில் PCOS -ஐத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் எளிதான வழி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள் ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி, நல்ல தூக்கம் மற்றும் மன அழுத்த மேலாண்மை உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளை மேற்கொள்வதாகும்.

இதனுடன், உங்கள் சமையலறையில் இருக்கும் மூன்று மசாலாப் பொருட்கள் PCOS நிர்வகிக்க உங்களுக்கு உதவலாம்.

பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம் ஆண்ட்ரோஜன் என்ற ஆண் ஹார்மோனைக் குறைக்க உதவுகின்றன, இது ஹிர்சுட்டிசம் (முகத்தில் அதிகப்படியான முடி) குறைக்க உதவும்.

1 டீஸ்பூன் பெருஞ்சீரகம் எடுத்து, இரவு முழுவதும் ஊறவைக்கவும், காலையில் 3-5 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, அதைப் பருகவும் என்று மருத்துவர் டிக்சா பரிந்துரைத்தார்.

கருப்பு மிளகு

கருப்பு மிளகு அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுகிறது  மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இது ஒரு அழற்சி எதிர்ப்பு முகவராகவும் செயல்படுகிறது, இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது.

1 டீஸ்பூன் ஆர்கானிக் தேனுடன் 1 பொடித்த கருப்பு மிளகு கலந்து காலையில் முதலில் எடுத்துக் கொள்ளுங்கள்.

வெந்தயம்

வெந்தயம் இன்சுலின் அளவுகள் மற்றும் குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை உறுதிப்படுத்த உதவுகிறது மற்றும் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகிறது, இது அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை நடுநிலையாக்க உதவுகிறது.

வெந்தயத்தை 1 டீஸ்பூன் எடுத்து இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை 5 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி பருகவும்.

நீங்கள் 1 கிளாஸ் தண்ணீர் எடுத்து, 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம், 2 கருப்பு மிளகு, 1 டீஸ்பூன் வெந்தயம், 1 சிறிய துண்டு வெல்லம் சேர்த்து, பாதியாகக் குறையும் வரை கொதிக்க வைத்து பருகலாம் என்று மருத்துவர் டிக்சா கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment