இம்யூனிட்டி, இதய பராமரிப்பு, ஜீரண சக்தி… பச்சைப் பட்டாணி எவ்ளோ நல்லதுனு பாருங்க!

நம்முடை அன்றாட உணவுகளில் பச்சைப் பட்டாணியை சேர்த்துக்கொண்டால் இதயத்திற்கு தேவையான ஆன்டி – ஆக்சிடண்டுகள் கிடைப்பதோடு, இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது.

Pea benefits in tamil: important benefits of green peas in tamil
Pea benefits in tamil: important benefits of green peas in tamil

Pea benefits in tamil: மணி மணியாய் கண்ணுக்கு விருந்தளிக்கும் ‘பச்சைப் பட்டாணி’ ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்றாக உள்ளது. மேலும் இவற்றை எந்த வகை உணவுகளுடன் சேர்த்து சமைக்கலாம். இவற்றில் மஞ்சள், கருப்பு, ஊதா என பல பட்டாணிகள் உள்ளன.

புரத சத்தின் மிகச் சிறந்த ஆதாரமாக உள்ள இந்த பச்சைப் பட்டாணி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுவது மட்டுமல்லாமல் வைட்டமின் A, B, C, E, K, துத்தநாகம், பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிரம்பி காணப்படும் ஒரு நல்ல ஆதாரமாகவும் உள்ளது.

“பச்சைப் பட்டாணி ஊட்டச்சத்துகளின் இருப்பிடமாகும். அவை பெரும்பாலும் இந்திய உணவுகளில் சிறந்த தோற்றத்தை உருவாக்க பயன்படுகிறது. மேலும் அவை செரிமான ஆரோக்கியம், கண் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றுக்கு சிறந்து.” என நடிகையும், உடற்பயிற்சி ஆர்வலருமான பாக்யஸ்ரீ கூறியுள்ளார்.

இதய பராமரிப்பு:-

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்பாக இதயம் உள்ளது. இதயத்திலிருந்து தான் உடலின் பல்வேறு பாகங்களுக்கு ரத்தம் சென்று வருகிறது. ரத்தம் தடையின்றி சீராக செல்ல ரத்தத்தில் ஆன்டி – ஆக்சிடண்டுகள் அதிகம் தேவை.

நம்முடை அன்றாட உணவுகளில் பச்சைப் பட்டாணியை சேர்த்துக்கொண்டால் இதயத்திற்கு தேவையான ஆன்டி – ஆக்சிடண்டுகள் கிடைப்பதோடு, இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

இம்யூனிட்டி:-

பச்சைப் பட்டாணியில் இருக்கும் ஒமேகா -3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள்ள் ஆக்ஸிஜனேற்றம் மற்றும் வீக்கத்தை குறைக்கின்றன. மேலும் இவற்றில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பிற சத்துகள் உங்கள் உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைக்கும் குணங்களை கொண்டுள்ளன. தவிர, நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தக்கூடிய ஒன்றாகவும் பச்சைப்பட்டாணி உள்ளது.

குளிர்கால பச்சைப் பட்டாணி நமது அன்றாட தேவைக்கான சத்துக்களில் பாதியை வழங்கிவிடுகிறது. கர்ப்பிணிகளுக்கு இது அவசியமான சத்து. இதில் இருக்கும் வைட்டமின் பி 9 குழந்தையின் நரம்புக்குழாய் குறைபாடுகளை தடுக்கிறது.

ஜீரண சக்தி:-

பச்சை பட்டாணியில் நிரம்பி காணப்படும் நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகின்றன

பச்சை பட்டாணியை உணவோடு சேர்த்து கொண்டால் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தி அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pea benefits in tamil important benefits of green peas in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com