பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதை மிகவும் விரும்புவார்கள். அழகான உடை, மேட்சிங் வளையல், கம்மல் என அனைத்தையும் பார்த்து பார்த்து வாங்கி பயன்படுத்துவார்கள். தலை முதல் கால் வரை அலங்கரித்து கொள்வார்கள். கடைகளிலும் பெண்களுக்கென விதவிதமான பொருட்கள் கொட்டிக் கிடக்கும். குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரை பொருட்கள் இருக்கும்.
இந்த நவீன காலத்தில் லைஃப்ஸ்டைல் பெரும் பங்கு வகிக்கிறது. பெண்கள் தங்கள் கூந்தலை அழகுபடுத்த ஹேர் ஸ்ட்ரைட்டனர் பயன்படுத்துகின்றனர். பிலிப்ஸ் ஹேர் ஸ்ட்ரைட்டனர் பலரும் பயன்படுத்துவர். அதேசமயம் முடியின் ஆரோக்கியம் முக்கியம். முடி சேதமாகிவிட கூடாது.
அந்தவகையில் பிலிப்ஸ் ஹேர் ஸ்ட்ரைட்டனர் 7000 சீரிஸ் BHS732/10 மாடல் பற்றி இங்கு பார்ப்போம்.
Philips Straightener 7000 series (BHS732/10) review
Philips Straightener 7000 நேவி ப்ளூ (Navy Blue) நிறத்தில் வருகிறது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 'மினரல் ஐயோனிக் தெர்மோஷீல்ட்' (Mineral Ionic ThermoShield) தொழில்நுட்பம் தலைமுடி சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இதிலுள்ள பிளேட்கள் ஆர்கான் எண்ணெய் (argan oil) சேர்த்து தயாரிக்கப்படுவதால் முடி சேதத்தை குறைக்கிறது.
Philips Straightener 7000 பயன்படுத்தியவர்கள் கூறுகையில், 210 டிகிரி செல்சியஸ், அதிக வெப்பநிலையில் ஸ்ட்ரெய்ட்னர் பயன்படுத்தியபோதிலும் முடி சேதமடையவில்லை. ஸ்ட்ரெய்ட்னர் பயன்படுத்து முன் எப்போதும் hair care products பயன்படுத்துவேன், ஆனால் இதைப் பயன்படுத்தியபோது நான் hair care products பயன்படுத்தவில்லை. 10-15 நிமிடங்களில் ஸ்ட்ரெட்னிங் செய்து விட்டேன். அடத்தியான கூந்தல் உள்ளவர்களுக்கு சற்று நேரம் ஆகலாம்.
இதில் டெம்பரேச்சர் கண்ட்ரோல் வசதி உள்ளது. அது மிகவும் நன்றாக உள்ளது. அதிகபட்சம் 230 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்டுள்ளது. ஸ்ட்ரெய்ட்னரில் ஒரு பிரத்யேக ஆன்/ஆஃப் பட்டன் உள்ளது.
மற்றொரு பட்டன் தானாகவே வெப்பநிலையை 210 டிகிரிக்கு மாற்றி அமைக்கிறது. விருப்பம் போல் டெம்பரேச்சர் கண்ட்ரோல் செய்து கொள்ளலாம். இது மற்ற பிலிப்ஸ் ஸ்ட்ரெய்ட்னர்களை விட பிரீமியமாக உள்ளது. Packing நன்றாக செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
முக்கிய அம்சம்
இதில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது, ஸ்ட்ரைட்டனர் 30 நிமிடங்களுக்குப் பிறகு தானாகவே ஆஃப்- ஆகி விடும் (Automatically shuts off after 30 minutes). நீங்கள் பயன்படுத்திவிட்டு ஸ்விட்ச் ஆப் செய்ய மறந்தால் கூட 30 நிமிடங்களுக்குப் பிறகு ஸ்ட்ரைட்டனர் தானாகவே ஆஃப்- ஆகி விடும்.
வாங்கலாமா? வேண்டாமா?
பிலிப்ஸ் ஹேர் ஸ்ட்ரைட்டனர் 7000 சீரிஸ் BHS732/10 மாடல் விலை ரூ. 9,995. பிரீமியம் ஸ்ட்ரைட்டனராக உள்ளது. டெம்பரேச்சர் கண்ட்ரோல் வசதி மற்றும் தலைமுடியை அதிகம் சேதமடைய செய்யாது போன்றவை சிறப்பாக உள்ளது. அதேசமயம் விலை கூடுதலாக இருந்தால், இதே Philips Straightener 7000 சீரிஸில், இது போன்ற அம்சங்களுடன் ரூ. 6,995 ஒரு ஸ்ட்ரைட்டனர் உள்ளது. அதை ட்ரை செய்து பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.