Advertisment

8.19 கோடி பேருக்கு தலா ரூ2000 பட்டுவாடா: நீங்கள் இன்னும் இந்தத் திட்டத்தில் சேரவில்லையா?

PM Kisan scheme tamil news: பொது சேவை மையங்கள் வாயிலாகவும் திட்டத்தில் சேர அதற்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Kisan Samman Yojana, Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana, how to register for PM KISAN, PM Kisan Samman Yojana news, PM Kisan Samman Yojana news in tamil, PM Kisan Samman Yojana latest news, PM Kisan Samman Yojana latest news in tamil

PM Kisan Samman Yojana, Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana, how to register for PM KISAN, PM Kisan Samman Yojana news, PM Kisan Samman Yojana news in tamil, PM Kisan Samman Yojana latest news, PM Kisan Samman Yojana latest news in tamil

PM Kisan Samman Yojana news in tamil: டிசம்பர் 2018 ல் தொடங்கப்பட்ட Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) என்பது ஒரு மத்திய அரசு திட்டம். மத்திய அரசின் 100 சதவிகித நிதியுதவியுடன் இத்திட்டம் இயங்கி வந்தாலும், பயனாளி விவசாய குடும்பங்களை அடையாளம் காண்பதற்கான முழு பொறுப்பும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடமே உள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கான நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளிலேயே வரவு வைக்கப்படும்.

8.19 கோடி PM Kisan Samman Nidhi (PM-KISAN) திட்டத்தின் பயனாளி விவசாயிகள், ரூபாய் 2,000/- தவனை தொகையை Pradhan Mantri Garib Kalyan Yojana திட்டத்தின் கீழ் பெற்றுள்ளனர் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள வருவாய் அதிகாரி அல்லது மாநில அரசால் நியமிக்கப்பட்ட Nodal Officer (PM-Kisan) ஆகியோரை அணுகி திட்டத்தில் சேரலாம். பொது சேவை மையங்கள் வாயிலாகவும் திட்டத்தில் சேர அதற்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் விவசாயிகள் PM Kisan Samman Nidhi portal வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.

Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana எவ்வாறு பதிவு செய்வது

STEP 1 PM Kisan Yojana வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறந்துக் கொள்ளவும்.

STEP 2 முகப்பு பக்கத்தில் "Farmers Corner" விருப்ப தேர்வை சொடுக்கவும்

STEP 3 ஒரு drop-down menu தோன்றும்

STEP 4 "New Farmers Registration" என்பதை சொடுக்கவும்.

STEP 5 அடுத்து வரும் படிவத்தை நிரப்பி, ஆதார் எண் மற்றும் captcha வையும் நிரப்பவும்.

STEP 6 "Continue" என்பதை சொடுக்கவும்.

STEP 7 நீங்கள் முன்பே பதிவு செய்திருந்தால் உங்களுடைய விவரங்கள் காண்பிக்கப்படும்.

ஆனால் இது உங்களுடைய முதல் பதிவு என்றால், "Record not found with given details" என்று காண்பிக்கும்.

PM Kisan portal லில் பதிவு செய்ய வேண்டுமா என்ற ஒரு optionனும் உங்களிடம் கேட்கப்படும். அதற்கு "Yes" என்று சொடுக்கவும்.

STEP 8 ஒரு புதிய பக்கம் திறக்கும் அதில் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.

உங்களுடைய முகவரி, நில ஆவணங்கள், அளவு ஆகிய விவரங்களை கேட்கும். நிரப்பிய பிறகு "Save" என்பதை தட்டவும்.

STEP 9 உங்களுடைய பதிவு எண் மற்றும் reference எண் ஆகியவை திரையில் தெரியும்.

STEP 10 உதவி எண்களையும் குறித்துக் கொள்ளவும்.

PM-Kisan உதவி எண். 155261 / 1800115526 (Toll-Free), 0120-6025109.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment