Advertisment

Jan Dhan Yojana: எஸ்.எம்.எஸ். வரும்... அப்புறம் பணமும் வரும்!

PMJDY Tamil News: இந்த ஏற்பாடு குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
fixed deposit interest rates, sbi, hdfc bank, icici bank, punjab national bank, fd rates compared

Axis Bank Tamil Nadu News, Axis Bank News In Tamil, Axis Bank Latest Tamil News, Axis Bank Chennai News, ஆக்சிஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி கடன், ஆக்சிஸ் வங்கி கடன் தவணை

Jan Dhan Yojana News: அரசின் கோவிட்-19 வைரஸ் நிவாரண தொகுப்பாக ‘Pradhan Mantri Garib Kalyan Yojana’ என்ற திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 200 மில்லியன் ஏழை பெண்கள் ரூபாய் 500/- ஐ தங்கள் வங்கி கணக்குகளில் பெற போகிறார்கள்.

Advertisment

எனினும் Pradhan Mantri Jan Dhan Yojana திட்டத்தின் கீழ் திறக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளின் மூலம் அரசு வழங்கப்போகும் பணத்தை எடுப்பதற்காக பயனாளிகள் வங்கி கிளைகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள் என்பதை மனதில் கொண்டு, மத்திய அரசு வங்கிகளிடம் சட்டம் ஒழுங்கு குலையாமல் இருப்பதை உறுதிசெய்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கி கிளைகளில் சமூக இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதி சேவைகள் துறை அனைத்து வங்கிகளுக்கும் வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அவர்களுடைய வங்கி கணக்கு எண் அடிப்படையில் வெவ்வேறு நாட்களில் வருமாறு கேட்கப்படுவதை உறுதி செய்ய சொல்லியுள்ளது.

எடுத்துக்காட்டாக வங்கி கணக்கு எண் 0 அல்லது 1 என்று முடிவடையும் வாடிக்கையாளர்களை வெள்ளிக் கிழமைகளில் வரச் சொல்வது, 2 அல்லது 3 என்று கணக்கு எண் முடிவடையும் வாடிக்கையாளர்களை சனிக்கிழமை வரச் சொல்வது போன்றது. இந்த ஏற்பாடு குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய போதும் வங்கிகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக PM Garib Kalyan Yojana திட்டத்தின் கீழ் நிதியை ஒழுங்கு குலையாமல் பயனாளிகளுக்கு விடுவிப்பதை உறுதி செய்யச் சொல்லியுள்ளார்.

கோவிட்-19 தொற்றின் தாக்கத்தை சமாளிக்க பெண் பயனாளிகள் ரூபாய் 500/- வீதம் அடுத்த மூன்று மாதங்களுக்கு பெறுவார்கள். இந்த திட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் மார்ச் 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த கடினமான காலகட்டத்தில் பெண்கள் அவர்களது வீட்டை நடத்துவதற்கு இது உதவும். மேலும் மத்திய அரசு இந்த பண பரிமற்ற திட்டத்துக்காக ரூபாய் 31,000 கோடியை செலவு செய்யும் என அவர் தெரிவித்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment