poondu chutney recipe garlic chutney recipe in tamil :
பூண்டு சட்னி இட்லி , தோசைக்கு பொருத்தமாக இருக்கும் சாதத்திற்கும் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ளலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ரொம்ப தூரம் பிரயாணம் செய்பவர்கள் இதை தாரளமாக எடுத்துச் செல்லலாம். இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. இட்லிக்கு மட்டும் இல்லாமல் குழிப் பணியாரம், அரிசி ரவையில் செய்யும் கொழுக்கட்டை எல்லாவற்றிக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
பூண்டு – 20 பல்
காய்ந்த மிளகாய் – 6
கடலைப்பருப்பு – ஒரு கைப்பிடி
புளி – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
கடுகு – தாளிக்க
முதலில் சிறிதளவு நல்லெண்ணெய்யை ஊற்றி அதில் பூண்டுகளை போட்டுபொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கடலைப்பருப்பை போட்டு அதையும் பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸியில் வறுத்தெடுத்த பூண்டு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, புளி, காய்ந்த மிளகாய் இவற்றையெல்லாம் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய்யை ஊற்றி கடுகு, கறிவேப்பிலைதாளித்து, அரைத்து வைத்த விழுதை இதில் சேர்த்து இறக்கி வைக்கவும். பூண்டை அப்படியே சாப்பிட மறுப்பவர்களுக்கு இப்படி சட்னி அடிக்கடி செய்து கொடுத்தால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்