Advertisment

HBD Rashmika: இலக்கியம் படித்துவிட்டு இதயங்களை திருடும் ராஷ்மிகா!

Tamil Cinema Update : உளவியல், இதழியல் மற்றும் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றுள்ள ரேஷ்மிகா படிக்கும்போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார்.

author-image
D. Elayaraja
New Update
HBD Rashmika: இலக்கியம் படித்துவிட்டு இதயங்களை திருடும் ராஷ்மிகா!

Cinema Actress Rashmika Mandana Birthday : தென்னிந்திய சினிமா மட்டுமல்லாது தற்போது பாலிவுட்டிலும் தனது கால்தடத்தை பதித்துள்ளவர் நடிகை ரேஷ்மிகா மந்தனா. 2 கே கிட்ஸ்களில் நேஷ்னல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ரேஷ்மிகா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

Advertisment

கடந்த 1996-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் விராஜ்பட் என்ற ஊரில் பிறந்தவர்தான் ரேஷ்மிகா மந்தனா. மைசூர் மற்றும் கூர்க் ஆகிய பகுதிகளில் தனது கல்வியை முடித்த இவர்,  பெங்களூர் எம்.எஸ்.ராமையா கல்லூரியில் தனது இளங்களை பட்டத்தை பெற்றுள்ளார். உளவியல், இதழியல் மற்றும் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றுள்ள ரேஷ்மிகா படிக்கும்போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்துள்ளார்.

publive-image

க்ளீன் அண்ட் கிளியர் பேஸ் ஆஃப் இந்தியா விருது

இதன் பலனாக கடந்த 2014-ம் ஆண்டு க்ளீன் அண்ட் கிளியர் பேஸ் ஆஃப் இந்தியா விருதினை பெற்ற ரேஷ்மிகா இதன் தனது சின்னத்திரை வாய்ப்பை உருவாக்கிக்கொண்டார். அதன்பிறகு ஒரு சில விளம்பர படங்களில் நடித்த ரேஷ்மிகாவின் நடிப்பை பார்த்து பிரபல கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டி தனது கிரிக்கி பார்ட்டி படத்தில் ரேஷ்மிகாவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

கிரிக்கி பார்ட்டி வசூல் வேட்டை

முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராஷ்மிகா, தனக்கென தனியாக ரசிகர்கள் கூட்டத்தையும உருவாக்கினார். மேலும் 4 கோடியில் உருவான இந்த படம் கிட்டத்தட்ட 50 கோடிக்குமேல் வசூலித்து ராஷ்மிகாவின் மார்க்கெட்டை முதல் படத்திலேயே உச்சத்தை தொட வைத்தது. தொடர்ந்து 2017—ல் வெளியான அஞ்சானி புத்ரா படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

publive-image

தெலுங்கில் உச்சம் தொட்ட மார்க்கெட்

அதனைத் தொடர்ந்து தெலுங்கில் 2018-ம் ஆண்டு சலோ என்ற படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகெண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் படம் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் ரேஷ்மிகா தெலுங்கிலும் தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கினார். இதன் பிறகு தெலுங்கில் அவருக்கு படவாய்ப்பு அதிகரிக்க தொடங்கியது.

நிச்சயதார்த்தத்தை ரத்து செய்த ராஷ்மிகா மந்தனா

தான் அறிமுகமான கிரிக்கி படத்தின் இயக்குநர் மற்றும் நடிகரான ரக்ஷித் ஷெட்டியுடன் காதலில் விழுந்த ராஷ்மிகா உடனடியாக அவருடன் நிச்சியதார்ததம் செய்துகொண்டார். ஆனால் கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு அவருக்கான தெலுங்கு மார்க்கெட் உச்சம் தொட்டதனால், சினிமாவில் பிஸியாக இருக்கும்போது தனக்கு திருமணம் வேண்டாம் என்று நிச்சயதார்த்தத்தை ரத்து செய்தார்.

publive-image

இதற்காக அவரை பலரும் விமர்சனம் செய்தாலும், அதை கண்டுகொள்ளாத ராஷ்மிகா தனது திரைப்பயணத்தில் புதிய அறிமுகங்கள பெற்று வருகிறார். நிச்சயதார்த்தம் ரத்து செய்தாலும், ராஷ்மிகாவின் பிறந்த நாள் அன்று அவரின் முன்னாள் காதலரான ரக்ஷித் ஷெட்டி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

முன்னணி நடிகர்கள் படத்தில் ராஷ்மிகா

கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்த ராஷ்மிகா மந்தனா, தொடர்ந்து, ராகர்ஜூனா மற்றும் நானியுடன் தேவதாஸ், கன்னடத்தில் தர்ஷனுடன் எஜமானா, விஜய் தேவாரகொண்டாவுடன் டியர் காம்ரேட், மகேஷ்பாவுடன் சரிலேரு நீக்கெவரு, பீஷ்மா, கன்னடத்தில் துருவ் சார்ஜாவுடன், பகரு, ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

publive-image

தமிழில் கார்த்தியுடன் சுல்தான்

கன்னடம் மற்றும் தெலுங்கில் ரசிகர்கள் கூட்டத்தை அமைத்த ராஷ்மிகா, தமிழில் கடந்த ஆண்டு வெளியான சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலமாகவே தமிழ் ரசிகர்களை ஈர்த்த ராஷ்மிகா சுல்தான் படத்தின் மூலம் தனது ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துக்கொண்டார்.

தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் பாக்ஆபீஸ் வசூலில் சாதனை படைத்தது. தற்போது மிஷன் மஞ்சு என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் கால் பதித்துள்ளார். அதேபோல் ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் குட்பை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

publive-image

விஜய்க்கு ஜோடியாக தளபதி 66 ?

தெலுங்கு, கன்னடம், தமிழ் என்பதை தாண்டி தற்போது ஹிந்தியில் நடித்து வரும் ராஷ்மிகா அடுத்து நடிகர் விஜய் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குநர் வம்சி இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவராக இருக்கும் ராஷ்மிகாவுக்கு வளர்ப்பு பிராணிகள் என்றால் மிகமும் பிடிக்குமாம். இதன் காரணமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது செல்லப்பிராணிகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அதேபோல் பிங்க் கலர் இவருக்கு மிகவும் பிடித்த கலராம்.

publive-image

தற்போது 26-வயதை கடந்துள்ள ராஷ்மிகா பிஸியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போதுவரை ராஷ்மிகாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 30 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கட்டிப்போட்டுள்ள ராஷ்மிகா மந்தனா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 2 கே கிட்ஸ்களில் நேஷ்னல் க்ரஷான ராஷ்மகாவுக்கும் நாமும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுவோம்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment