Advertisment

பொறுப்புணர்வுக்கான கற்பனை - குழந்தைகளுக்கு கற்றுத்தரும் மண்பாண்டங்கள்

பெரும்பாலான குழந்தைகளுக்கு சிறு வயதில் விளையாடுவதற்கு களிமண் கிடைத்திருக்கும். அனேகமாக அப்போது செய்தது வேடிக்கையாகத்தான் இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pottery, parenting tips, parenting, teaching kids skills, why kids should learn pottery

pottery, parenting tips, parenting, teaching kids skills, why kids should learn pottery

பெரும்பாலான குழந்தைகளுக்கு சிறு வயதில் விளையாடுவதற்கு களிமண் கிடைத்திருக்கும். அனேகமாக அப்போது செய்தது வேடிக்கையாகத்தான் இருக்கும். இருந்தாலும் ஒரு சிலர் அற்புதமான (களிமண்) இந்த ஊடகத்தின் மூலம் அவர்களுடைய படைப்பாக்கத் திறனை வெளிப்படுத்துவார்கள். மட்பாண்டம் செய்வதைக் கற்றுக்கொள்வதால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதைப் பற்றி சில ஆசிரியர்களுடன் பேசினோம்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கற்பனைக்கு எந்த எல்லையும் இல்லை

"களிமண்ணானது இது இப்படித்தான் என்பதாகக் கட்டமைக்கப்படாத ஒன்றாக இருப்பதால். குழந்தைகளை கற்பனையில் சிறகடித்துப் பறக்கும்படி செய்கிறது. இது, அவர்கள் என்னமாதிரி வேண்டுமானாலும் வேடிக்கையாக உருவங்களை செய்துகொள்ளும்வகையிலான அவர்கள் தொட்டு உணரக்கூடிய ஊடகமாக இருக்கிறது. மேலும், இது குழந்தைகளுக்கு அடக்கம், சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை ஆகியவற்றைக் கற்பிக்கிறது, ஏனென்றால், நடப்பில் நீங்கள் பல முறை செய்வதை குலைத்துப்போடவேண்டியிருக்கும். முதலில் நான் பெரியவர்களுக்கே கற்றுத்தருவேன்;குழந்தைகளுக்கு கற்பிக்கத் தயங்கினேன். ஆனால் பாருங்கள், ஒரே வியப்பு, குழந்தைகள்தான் வேகமாகக் கற்றுக்கொண்டதைப் பார்த்தேன். ஒரு வேடிக்கையான நிகழ்வு... கற்றுக்கொடுக்கும்போது ஒரு குழந்தை செய்ததை நான் குலைத்துப்போட்டேன்; அவன் பதிலுக்கு என்னுடையதை குலைத்துப்போட்டான். பெரியவர்கள்கூட அப்படி செய்யுமாறு கேட்டால் தாங்கலாக உணர்கிறார்கள். ஆனால் குழந்தைகளோ நெகிழ்ந்துபோகிறார்கள். காலப்போக்கில், தாங்கள் சிறப்பாகச் செய்யமுடியும் என்பது அவர்களுக்குத் தெரிகிறது. உண்மையில், என் மாணவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொள்கிறேன்.

பொதுவாக, நான்கு வயதிற்கு உள்பட்ட குழந்தைகள் என்னிடம் கற்றுக்கொள்ள வருகிறார்கள். நான்கைந்து ஆண்டுகள் அப்படியே ஒட்டிக்கொள்கிறார்கள். ஐந்து முதல் ஆறு குழந்தைகளைக் கொண்ட குழுக்களில் சிற்பங்கள், ஸ்லாப் வேலைப்பாடு மற்றும் சக்கர வேலைப்பாட்டைச் செய்கிறோம். வனையப்பட்ட களிமண் வேலைப்பாடுகளைச் சுட்டபிறகு அவர்கள் அந்தப் படைப்புகளை வீட்டிற்கு எடுத்துச்செல்கிறார்கள் (சுடுவதில் அவர்கள் ஈடுபடுவதில்லை). ஏழு முதல் எட்டு வயதிற்குள் இருப்பவர்கள் நடப்பதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். என் வகுப்பில் உள்ள முக்கியமான சொல், பிண்டாஸ். குழந்தைகள் தங்களுக்கு என்ன வருகிறதோ எந்த பயமும் இல்லாமல் அதைச் செய்வது சரி என்பதில் பிடிப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஓராண்டுவரைகூட எடுத்துக்கொள்ளும். ஆனால் அவர்கள் விரும்பியபடி செய்வதற்கான சுதந்திரம், அது எல்லா குழந்தைகளுக்கும் கொடுக்கப்படவேண்டும்.

ஒரு உணவகத்தில் ஒரு குழந்தை ஒரு தட்டைப் பார்த்துவிட்டு வந்து, ஆரம்பத்திலிருந்து முடிக்கும்வரை அதை அப்படியே செய்துபார்க்க முயற்சிசெய்தாள். அவளுடைய நம்பிக்கையையும் உற்றுநோக்கும் திறனையும் பார்க்கக் கிடைத்தது, ஒரு மகிழ்ச்சியான அனுபவம். தெரிவியல் வகுப்புகளை நாங்கள் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் வினா-விடை நேரம் உண்டு. வகுப்பில் உட்கார்ந்திருப்பதைப் போல உணராதபடி கைவினை நுட்பங்களைப் பற்றி அவர்கள் கற்றுக்கொள்வது இப்படித்தான். எந்த வெப்பநிலையில் முதல்கட்டமாகச் சுடுவது, களிமண் பொருள்கள், மெருகூட்டல் போன்ற பல சங்கதிகள் எங்களுக்கு இருக்கின்றன.”

- சுஜாதா பாகல்

சிறுபிள்ளைகளின் அவதானிப்பு!

“ கொல்கத்தாவில் களிமண்ணில் சிற்பங்கள் செய்யப்படுவதைப் பார்த்து, களிமண்ணை எடுத்துவந்து, நானே சிற்பங்களை உருவாக்க முயற்சிசெய்வது என களிமண்ணோடு வளர்ந்தேன். டெல்லியிலோ வகுப்பிலோ பயிற்சிப் பட்டறையிலோதான் குழந்தைகளுக்கு களிமண் அறிமுகமாகிறது. பட்ட்பர்கஞ்சில் உள்ள வீர் உதம் சிங் பள்ளிக்கு பட்டறை நடத்துவதற்காகச் சென்றோம். பயிற்சியின் மையக்கரு, இடம்பெயர்வு. நகரங்களில் குருவிகள் எப்படி காணாமல்போகின்றன என்பதைப் பற்றி விவாதித்தோம். குழந்தைகளுக்கு சில காணொலிகளையும் காட்டினோம். களிமண்ணால் குருவி பொம்மையை எப்படி செய்வதென சொல்லிக்கொடுத்தேன். ஒரு குழந்தை, மயில் பொம்மை செய்யத் தொடங்கிவிட்டது. அவனிடம் கேட்டதற்கு, இப்போது சிட்டுக்குருவிகள் மறைந்துவிட்டன என்றும் ஆனால், தன்னுடைய சுற்றத்தில் மயில்கள் இருப்பதாகவும் தனக்கு அவை மிகவும் பிடிக்கும் என்றும் அவற்றைப் பாதுகாக்க ஏதாவது செய்ய விரும்புவதாகவும் சொன்னான். இது, வேறொரு யோசனைக்கு வித்திட்டது. இன்னொரு ஆசிரியர் இதை ஒரு காமிக் புத்தகமாக மாற்றுவதற்கு உதவினார். குழந்தைகளின் மூளை எப்படி செயல்படுகிறது என்பது இதுதான்!

களிமண் வேலைப்பாட்டில் குழந்தைகளை நீண்ட காலம் ஈடுபடுத்தமுடியும். அதைப்போலவே முழுக் குடும்பமும் குழுச் செயல்பாட்டில் இறங்கலாம். உரோகினியில் உள்ள டிடிஏ பூங்காவில் இதுபோன்ற ஒரு பட்டறையை அண்மையில் நடத்தினோம். வேலைப்பாட்டில் மூழ்கியவுடன் எல்லா தரப்பு மக்களும் எவ்வாறு சாந்தமடைவார்கள் என்பதைப் பார்ப்பது அலாதியானது. அது உங்களை வேறொரு சூழலுக்கு இட்டுச்செல்லும். யாரும் நிறங்களோடும் வடிவத்தோடும் முழுமையாக தன்னைப் பரிசோதித்துக்கொள்ள முடியும் அல்லது அவரவர் அடையாளத்திலிருந்து சில அம்சங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கருத்தாக்கத்துக்கு இட்டுச்செல்லலாம். கற்பித்தலைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட மரபு எப்படி, எப்போது தொடங்கியது, ஒரு கலைஞரின் வாழ்க்கை, இப்படி பல கதைகளைச் சொல்லி வகுப்புகளைத் தொடங்குவதன் மூலம் மாணவர்களை கற்றுக்கொள்வதில் ஈடுபடுத்த முயல்கிறேன்… தாத்தாவும் பாட்டியும் நமக்குச் சொன்ன கதைகளை நாம் மறந்துவிடவில்லைதானே! எனவே, ஒரு வகுப்பை சுவையுள்ளதாக்க காணொலிக் கருவிகளைப் பயன்படுத்துவது தவறான யோசனை அல்ல. அதைவிட இது ஊடாடத்தக்கதாக இருக்க வேண்டும். இப்படியாக, வருங்காலத் தலைமுறைக்கும் இந்தக் கலையை தக்கவைத்துக்கொள்வோம்."

- சுவாஜித் மொண்டால், டெல்லி நுண்கலைக் கல்லூரி, வருகைதரு பேராசிரியர்.

பொறுப்பேற்கக் கற்றுக்கொள்கிறார்கள்

“ இது யாருக்கும் இயல்பாகவே வரக்கூடியது; வேறு யாரும் கட்டாயப்படுத்தி வரைவைக்க்முடியாது. களிமண் வேலைப்பாட்டைச் செய்யும் நாளின் நிறைவில், அது உங்களை வெளிப்படுத்திக்கொள்வதற்கான ஓர் ஊடகம் என்பது புரியும். களிமண்ணைத் தொடவிரும்பாத மாணவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறிந்து எனக்கு வியப்பு. அப்படிப்பட்டவர்கள் பொதுவாக கலை மீது விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள்; ஆனால் தங்கள் கைகளை அழுக்காவதை அவர்கள் விரும்பவில்லை. இதற்கு நேர்மாறாக, எப்போதுதான் வாராந்திர வகுப்பு வருமோ என காத்திருக்கும் மாணவர்களும் இருக்கின்றனர். அது என் கண்களைத் திறந்துவிட்டதைப் போல இருந்தது; ஏனென்றால், நீங்கள் அற்புதமான ஒன்றைக் கண்டுபிடித்திருப்பீர்கள்;ஆனால், அதை அனைவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்; மற்றவர்களின் கருத்துகளிலிருந்து நிறைய விசயங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பாக இருக்கும். வகுப்பில் குழந்தைகள் வேலைப்பாடு செய்வதற்கான ஒரு எண்ணக்கருவைச் சொல்வேன். ஆனால் அவர்களுக்கு தங்களின் எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் உண்டு. இதுதான் அவர்களை பிணைத்துவைக்கிறது. யாருக்கு அதிக படைப்பாற்றல் உண்டு, யாருக்கு அதிகப்படியான நுட்பம் தெரியும் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் அதிகமாக கைவேலைப்பாடுகளைத்தான் செய்கிறோம். அது பள்ளியில் இருப்பதாலும் 45 நிமிட வகுப்பு என்பதாலும் ஒரு சவாலாக இருக்கும். பானை வனைவதற்கான சக்கரங்கள் குறைவாக இருப்பதால் குழுக்களாக வேலைசெய்கின்றனர். சுவாரஸ்யம் என்னவென்றால், அவர்கள் ஒருவருக்கொருவர் சிறந்த வழிகாட்டிகளாகவும் தங்களை நிரூபிப்பதுதான். அவரவர் முறைக்காகக் காத்திருக்கவேண்டி இருப்பதால் மற்றவர் முறையின்போது சரியாகச் செய்வது எப்படி என்பதை தங்கள் நண்பர்களுக்குச் சொல்லித் தருகிறார்கள்.

ஒன்பதாம் வகுப்பு மாணவர் பொதுவாக ஒரு 6ஆம் வகுப்பு மாணவனைவிட புரிந்துகொள்வதற்கு கூடுதல் நேரம் எடுத்துக்கொள்கிறார். ஏனெனில், கை அசைவுகளைப் பற்றி அவர்களுக்கு கூடுதல் விழிப்பு உணர்ச்சி இருக்கிறது. அதே சமயம் சிறு பிள்ளைகளோ களிமண்ணைத் தொடுவதிலும் வடிவத்தை அமைப்பதிலும் ரொம்பவும் இலகுவாக இருக்கிறார்கள். யோசனைகள் என வருகையில் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகள்கூட இன்னும் சிறப்பாக உள்ளனர். 3-4 ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர்கள் குறும்புத்தனத்தோடு இருப்பார்கள். அவர்களுக்கு கூடுதல் வழிகாட்டுதல் தேவைப்படலாம். ஏனெனில் அன்றாட வாழ்க்கையில் என்ன செய்ய முடியும் அல்லது செய்யமுடியாது என்பதை அவர்களுக்கு மற்றவர்கள் சொல்கிறார்கள். 8ஆம் வகுப்பு முதல் குழந்தைகள் அமைதிநிலைக்கு வந்துவிடுகிறார்கள். அந்தக் கட்டத்தில் அவர்களுக்கு தற்பெருமையும் வந்துவிடுகிறது. ஆனால் 5-7 வகுப்புகளில் சிறந்த பண்பு நிலவுகிறது. மேனிலை மாணவர்கள் தங்களின் இறுதித் திட்டங்களில் தரப்படுத்தப்படுகிறார்கள். முப்பரிமாண வேலைப்பாடுகளைச் செய்வதன் மூலம், பரிமாணங்கள் மற்றும் கோணங்களின் அனைத்து அம்சங்களையும் அவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. இதையொட்டி, அவர்களின் கவனிப்பு, வரையும் திறன்களை மேம்படுத்தவும் உதவுகிறது.

எந்தவொரு கலைப் பள்ளியும் அனைத்து வகையான ஊடகங்களைக் கொண்டும் கைவினைப்பொருள் உருவாக்குவதைக் கற்றுத்தரவேண்டும். என் வகுப்பில் ஒரு சிறுமி கையுறைகள் மற்றும் சிமென்ட்டைப் பயன்படுத்தி கைகளை உருவாக்க முயன்றாள். அது ஒரு சோதனை முயற்சியாக இருந்தாலும் அவள் மீண்டும் களிமண்ணைக் கொண்டு, வேலைப்பாடுகளைச் செய்வதற்கு வந்தாள். கவனம்குவிக்கத் தொடங்கி, உள்ளுக்குள் மூழ்கிவிட்டதும் அவளுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. ஒரு முறை அவர்கள் கவனம்குவிக்கத் தொடங்கி, ஆழ்ந்துவிட்டால் அவர்களின் எண்ணக்கருக்கள் சிறகடிப்பதை யாராலும் நிறுத்தமுடியாது. ஒழுங்கு என்பது தானாகவே வந்துவிடுகிறது. இளக்கமாக இருக்கும்போதும் வறண்ட பின்னரும் தங்கள் ஓடுகளைப் போர்த்த மறந்துவிட்டால், மீண்டும் புதிதாகத்தான் வேலையைத் தொடங்கவேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே, அவர்கள் வேலையைச் செய்துமுடித்து ஒப்படைக்கும் காலக்கெடுவை நிறைவுசெய்வதில் கவனம்கொள்கிறார்கள். அவர்கள் கழிப்புகளைப் பற்றி நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்; முடிந்தவரை மறுசுழற்சி செய்ய முயற்சிசெய்கிறோம். குல்ஹாட் உருவாக்கும் ஒரு வேலைத்திட்டத்தை நாங்கள் செய்தோம். அப்போது, பிளாஸ்டிக் கோப்பைகளைவிட சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு பேசினர்”

- டின்னி அரோரா, நொய்டா, பாட்வேஸ் பள்ளியில் ஆசிரியர்

தமிழில்: இர.இரா.தமிழ்க்கனல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Kids
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment