Advertisment

நெருக்கடி காலத்தில் இலவச சமையல் கேஸ்: உஜ்வாலா திட்டம் குறித்து அறிந்தீர்களா?

PMUY: பிப்ரவரி 2018 ஆம் தேதி இந்த திட்டத்தின் இலக்கு 8 கோடி எரிவாயு இணைப்புகளாக திருத்தப்பட்டது. மேலும் விரிவாக்கப்பட்ட / தளர்வான அடையாள அளவுகோல்கள் விரிவாக்கப்பட்ட (E-PMUY) திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூபாய் 4800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pradhan Mantri Ujjwala Yojana, சமையல் எரிவாயு இணைப்பு திட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம், Pradhan Mantri Ujjwala Yojana 2020, PMUY, Pradhan Mantri Ujjwala Yojana benefits, What is Pradhan Mantri Ujjwala Yojana,Pradhan Mantri Ujjwala Yojana need,Pradhan Mantri Ujjwala Yojana form, How does Ujjwala Scheme works,Pradhan Mantri Ujjwala Yojana UPSC,Ujjwala Yojana

Pradhan Mantri Ujjwala Yojana, சமையல் எரிவாயு இணைப்பு திட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம், Pradhan Mantri Ujjwala Yojana 2020, PMUY, Pradhan Mantri Ujjwala Yojana benefits, What is Pradhan Mantri Ujjwala Yojana,Pradhan Mantri Ujjwala Yojana need,Pradhan Mantri Ujjwala Yojana form, How does Ujjwala Scheme works,Pradhan Mantri Ujjwala Yojana UPSC,Ujjwala Yojana

Pradhan Mantri Ujjwala Yojana: பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்களால் மே 1, 2016 ஆம் நாள் உத்திரபிரதேசத்தில் தொடங்கப்பட்டது. 5 கோடி வீடுகளில் திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 8000 கோடி ஒதுக்கப்பட்டது. முக்கியமாக கிராமபுறங்களில் உள்ள ஏழை வீடுகளுக்கு சுத்தமான சமையல் எரிபொருளை வழங்குவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Advertisment

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

- இத்திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள வயது வந்த பெண்களின் (adult woman) பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. ஆனால் அந்த குடும்பங்களில் ஏற்கனவே சமையல் எரிவாயு இணைப்பு இருக்க கூடாது என்பது ஒரு முக்கியமான விதிமுறை.

மாதம் ரூ. 361 கட்டினால் எஸ்பிஐயில் 30,000 பெறலாம். எப்படி தெரியுமா?

- இணைப்புக்கான தகுதியுடையவர்கள் சமூக பொருளாதார சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் (Socio-Economic Caste Census) அடிப்படையில் அடையாளம் காணப்படுகின்றனர்.

- ரூபாய் 1600 நிதியுதவியுடன் மத்திய அரசு ஒரு புதிய சமையல் எரிவாயு இணைப்பை வழங்குகிறது.

- வாடிக்கையாளர் எரிவாயு அடுப்புக்கான தொகையையும், முதல் மறு நிரப்பல் எரிவாயு உருளைக்கான தொகையையும் செலுத்துவார்.

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் நன்மைகள்

எரிவாயு இணைப்புக்கு நிதி உதவியாக ரூபாய் 1600/- வழங்கப்படுகிறது, எண்ணெய் நிறுவனங்களால் எரிவாயு அடுப்பு மற்றும் முதல் மறு நிரப்பல் எரிவாயு உருளை ஆகியவற்றை வாங்க வட்டி இல்லாத கடன் வழங்கப்படுகிறது. முதல்முறை செலுத்தும் ரூபாய் 1600/- ல் ஒரு எரிவாயு உருளை, pressure regulator, பாதுகாப்பு குழாய் (safety hose), கையேடு ஆகியவையும் அடங்கும்.

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா: திருத்தப்பட்ட திட்டம்

பிப்ரவரி 2018 ஆம் தேதி இந்த திட்டத்தின் இலக்கு 8 கோடி எரிவாயு இணைப்புகளாக திருத்தப்பட்டது. மேலும் விரிவாக்கப்பட்ட / தளர்வான அடையாள அளவுகோல்கள் விரிவாக்கப்பட்ட (E-PMUY) திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூபாய் 4800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் திருத்தப்பட்ட இலக்கு 2020 ல் எட்டப்படும். அனைத்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வீடுகள், PMAY (Gramin) மற்றும் Antyoday Anna Yojana (AAY) பயனாளிகள், வனவாசிகள் (Forest dwellers), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (Most Backward Classes), தேயிலை தோட்ட மற்றும் முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியின மக்கள், தீவுகளில் வாழும் மக்கள் உட்பட அனைவரையும் உள்ளடக்கும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் நாடு முழுவதும் உள்ள 715 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது திட்டத்தின் ஒரு சிறப்பம்சமாகும்.

எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் இல்லை.. ஒரே போடு போட்ட எஸ்பிஐ!

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்துக்கு தேவைப்படும் ஆவணங்கள்

- உள்ளாட்சிகளால் வழங்கப்படும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான சான்று

- ரேஷன் அட்டை

- அடையாள ஆவணம் (ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை)

- சமீபத்திய பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம்.

- ஓட்டுனர் உரிமம்

- குத்தகை ஒப்பந்தம்

- தொலைபேசி/ மின்சார கட்டணம்/ தண்ணீர் கட்டண ரசீது

- கடவுச்சீட்டின் நகல்

- Self-declaration attested by Gazetted Officer

- Flat Allotment/Possession Letter

- வீடு பதிவுக்கான ஆவணங்கள்

- LIC பாலிசி

- வங்கி/ கடன் அட்டை அறிக்கை.

கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு எரிவாயு உருளை மூன்று மாதங்களுக்கு அதாவது ஜூன் 2020 வரை இலவசமாக வழங்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment