Advertisment

கொரோனா வைரஸ்: குழந்தைகளை பள்ளி, டியூஷன், சுற்றுலா அனுப்பலாமா?

கைகழுவும் வழிமுறையை முதலில் நாம் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும். தொற்றுநோயைத் தடுக்க இதுவே சிறந்த வழி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா வைரஸ்: குழந்தைகளை பள்ளி, டியூஷன், சுற்றுலா அனுப்பலாமா?

கொரோனா வைரஸ் , பாதுகாப்பு , கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவரும் சூழ்நிலையில், ஒவ்வொரு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறார்கள். நமது குழந்தைகள் பொதுவாக  சுறுசுறுப்பானவர்கள். எனவே,டியுஷன் முதல் விளையாட்டு மைதானங்கள் வரை பலவகையான சூழல்களை எதிர்கொள்கின்றனர். எனவே சரியான நடவடிக்கைகளின் மூலம் குழைந்தகளின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், மும்பை குழந்தை மருத்துவ டாக்டர் வினய் ஜோஷியிடம், குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கு முன்பு பெற்றோர்கள் மனதில் கொள்ள வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேசியிருந்தோம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது உண்மை தான். ஆனால், பதட்டமடையத் தேவையில்லை, என்று டாக்டர் ஜோஷி கூறினார்.

குழந்தைகள் கை கழுவும் போது கைகளின் பின்புறத்திலும், விரல்களுக்கு இடையிலும், நகங்களுக்கு அடியிலும் தேய்த்துக் கழுவ வேண்டும். சோப்பு, தண்ணீர் அல்லது ஆல்கஹால் சார்ந்த ஹேண்ட் சானிடைசர்கள் மூலமாக குறைந்தது 20 விநாடிகள் வரை கைகழுவுவது மிகவும் நல்லது" என்றார்.  இந்த வழிமுறையை முதலில் நாம் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். தொற்றுநோயைத் தடுக்க இதுவே சிறந்த வழியாகும்,”என்றார்.

பள்ளியில் :  குழந்தைகள் ஆல்கஹால் சார்ந்த  ஹேண்ட் சானிடைசர்கள் பள்ளிக்கு கொண்டு செல்ல முடியும். கைகுலுக்குவது, கட்டிப்பிடிப்பது போன்ற அதிக உடல் தொடர்புகளை கொண்ட செயல்களை தவிர்க்க சொல்லிக் கொடுக்கவேண்டும். குறிப்பாக, தனது வகுப்பு தோழி/தோழன் காய்ச்சலின் அறிகுறிகளைக் காட்டினால். வகுப்பில் உள்ள மாணவர்கள் யாரேனும், சமீப காலத்தில் கொரோனா வைரஸ் பாதித்த  நாடுகளுக்கு சென்று வகுப்பிற்கு திரும்பியிருந்தால், நீங்கள் உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை சிறிது காலம் தவிர்க்க வேண்டும். உங்கள் குழந்தை ஏதேனும், அறிகுறிகளைக் காட்டினால், உடனடியாக  மருத்துவ உதவியை நாடுங்கள்.

பள்ளிக்கூடத்தில் இருக்கும் பெஞ்சு, மாடி, கதவு , போர்டு ஆகியவற்றை கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்வதினால் குழந்தைகளை பாதுகாப்பை பள்ளி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகளுக்கு இருமல், தும்மல் போன்றவைகளை  எவ்வாறு செய்வது என்பதனை கற்பிக்க வேண்டும். “ஏனெனில், குழந்தைகள் தும்மும்போதும்  (அ) இருமும்போதும், ​தங்கள் வாயை மூடுவதில்லை. கைக்குட்டையை பயன்படுத்துவதில்லை,”டாக்டர் ஜோஷி வலியுறுத்தினார்.

Explained : கொரோனா வைரஸ் (COVID-19) பயத்தை எவ்வாறு கையாள்வது?

சுற்றுலா : கை கழுவுதல், சுத்தமான ஹோட்டல்களில் தங்குவது, சுத்தமான இடங்களிலிருந்து சாப்பிடுவது போன்ற வழக்கமான முன்னெச்சரிக்கைகள் அவசியம். நன்கு சமைத்த சூடான உணவில் கவனம் செலுத்துங்கள்,குறிப்பாக அது இறைச்சியாக இருக்கும்போது. கொரோனா வைரஸ் விலங்குகளில் காணப்படுகிறது. எனவே நீங்கள் சமைத்த உணவை சாப்பிடுவது மிக முக்கியமாக கருதப்படுகிறது,”என்றார்.

பிறந்தநாள் விழா மற்றும் டியூஷன் : கூட்டத்தில் ஏதேனும் ஒரு குழந்தை காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் (அ) கொரோனா வைரஸ் பரவிய நாடுகளில் ஒன்றில் பயணம் செய்திருந்தால், உங்கள் குழந்தைகளை அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர் வலியுறுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment