Advertisment

எண்ணெய், காட்டன் துண்டு, ஹேர் பேக்.. ப்ரீத்தி சஞ்சீவ் ஹேர் கேர் சீக்ரெட்ஸ்

இப்போது கலைஞர் டிவியில் பொன்னி கேர் ஆப் வாணி ராணி என்கிற புதிய சீரியலில், ப்ரீத்தி நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
preethi sanjeev

preethi sanjeev hair care tips

சின்னத்திரையின் ஸ்டார் தம்பதி, சஞ்சீவ் - ப்ரீத்தி. திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து பிரேக் எடுத்த ப்ரீத்தி, சன் டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் ரீஎண்ட்ரீ கொடுத்தார்.

Advertisment

இப்போது கலைஞர் டிவியில் பொன்னி கேர் ஆப் வாணி ராணி என்கிற புதிய சீரியலில், ப்ரீத்தி நடித்து வருகிறார். பிரீத்தி சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் ஒருமுறை தன்னுடைய முடி பராமரிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார். அந்த குறிப்புகளை அப்படியே தனது மகளுக்கு செய்து காட்டினார்.

publive-image

முடி பராமரிப்பு குறித்து ப்ரீத்தி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் இதோ!

ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் மூன்றையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து சூடு பண்ணுங்க. இதை உச்சந்தலையில நல்ல தடவி மசாஜ் பண்ணுங்க.

இது ஸ்ரீபிரியா மேடம் தான் எனக்கு சொன்னாங்க. இந்த மூணு எண்ணெய்யும் கலந்து, சூடு பண்ணி முடிக்கு தடவினா ரொம்ப நல்லது. இது உடம்புக்கு நல்ல குளிர்ச்சி தரும், முக்கியமா பொடுகு வராது.

எண்ணெய் தேய்ச்சதுக்கு அப்புறம், தலைமுடிய மொத்தமா எடுத்து கொண்டை போட்டுக்குங்க. அப்புறம் ஒரு நல்ல காட்டன் துண்டு எடுத்து, அது சூடு தண்ணீல நனைச்சு, பிழிஞ்சு உங்க தலைமுடில கட்டிக்கோங்க. ஒரு 15 நிமிஷம் அப்படியே இருக்கட்டும்.

அடுத்து ஹேர் பேக் ரெடி பண்ணலாம். அதுக்கு வெந்தயம், முட்டை வெள்ளைக்கரு, தயிர் போதும்.

ஒரு கிண்ணத்துல கொஞ்சமா வெந்தயம் எடுத்து, தண்ணீர் சேர்த்து ஊற வைங்க. இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, நல்ல பேஸ்டா அரைச்சு எடுத்துக்கோங்க.

இப்போ ஒரு கிண்ணத்துல முட்டை வெள்ளைக்கரு, தயிர், அரைத்த வெந்தயம் ஒன்னா மிக்ஸ் பண்ணுங்க. ஹேர் பேக் ரெடி.

எப்படி அப்ளை பண்ணனும்?

ஏற்கெனவே தலையில கட்டி வச்ச துண்டு எடுத்துட்டு, நீங்க ரெடி பண்ண ஹேர் பேக்க உச்சியில இருந்து எல்லா பக்கமும் நல்ல தடவுங்க. இது ஒரு 45 நிமிஷம் அப்படியே வைக்கணும். அப்புறம் வழக்கம்போல தலைமுடிய கழுவினா முடி ரொம்ப சாஃப்டா இருக்கும்.

குறிப்பா தலைமுடி ஈரமா இருக்கும் போது சீப்பு யூஸ் பண்ணக்கூடாது. இல்லன்னா முடி உடைஞ்சு போயிடும். அதனால நல்ல முடி உலர்ந்ததுக்கு அப்புறம் தலைமுடிய சீவுங்க. அதே மாதிரி ஹேர் டிரையர் வச்சு முடிய எப்போதும் காய வைக்காதீங்க என முடி பராமரிப்பு குறித்து ப்ரீத்தி பகிர்ந்து கொண்டார்.

இதோ அந்த வீடியோ!

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment