Advertisment

யங் ஜோடிகள் தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதி!

குழந்தை பெற்றுக் கொள்வது என்பது ஒரு ஜோடியின் வாழ்வில் முக்கிய நிகழ்வு. ஆனால் பல்வேறு காரணங்களால் பல ஜோடிகள் இதை தாமதப்படுத்துவதை தேர்வு செய்கின்றனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
யங் ஜோடிகள் தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதி!

இந்தியாவில் பொதுவான பல ஆரோக்கிய பிரச்சினைகளோடு மலட்டுத்தன்மையும், தொற்றா நோய்களோடு ஒன்றன்பின் ஒன்றாக அதிகரித்து வருகிறது. Indian Society of Assisted Reproduction என்ற அமைப்பு மலட்டுத்தன்மை வேகமாக அதிகரித்து வரும் ஒரு பிரச்சினை என கூறியுள்ளது. நகர்புற மற்றும் கிராமப்புற இந்தியாவில் 10 முதல் 14 சதவிகிதம் மக்கள் தொகையை இது பாதித்துள்ளது.

Advertisment

வாழ்க்கை முறை இன்னல்களோடு தொடர்புடையது மலட்டுத்தன்மை பிரச்சினை

இன்றைய வேகமான உலகில் ஒரு வசதியான வாழ்கை முறையின் தேவைகள் வாழ்கையை ஒரு போட்டியாக மாற்றியுள்ளது. மேலும் ஆரோகியமற்ற வாழ்கை முறை தனிநபர்களையும், ஜோடிகளையும் மலட்டுத்தன்மைக்கு இறையாக்கியுள்ளது. உடல் உழைப்பு தேவைப்படாத வாழ்கைமுறை, நொறுக்கு தீனிகள் மற்றும் குளிர்பான நுகர்வு, உடல் பருமன், புகைபிடித்தல், மது அருந்துதல், அதிகரிக்கும் மன அழுத்தம், ஒழுங்கற்ற தூங்கும் முறை, சர்க்கரை வியாதி போன்றவை மலட்டுத்தன்மை ஏற்படுவதுக்கான முக்கிய காரணங்கள் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

அனைத்து கவலைகளையும் மறக்க புத்தகம் தான் ஒரே வழி... தூக்கத்துக்கும் அதே வழி தான்!

கூடுதலாக ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, Blocked Fallopian Tubes, Polycystic Ovary Syndrome (PCOD), Endometrial Polyps, Endometrial Tuberculosis, பெண்களுக்கு ஏற்படும் Anti Mullerian Hormone குறைபாடு ஆகியவை மருத்துவ காரணங்களாக கூறப்படுகிறது. மோசமான தரம் வாய்ந்த விந்தணு, குறைந்த விந்தணு எண்ணிக்க, ஆண்மை குறைபாடு ஆகியவை ஆண் மலட்டுத்தன்மை நோயாளிகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய பங்களிக்கின்றது.

மலட்டுத்தன்மை சவாலை எதிர்கொள்வது எப்படி?

குழந்தை பெற்றுக் கொள்வது என்பது ஒரு ஜோடியின் வாழ்வில் முக்கிய நிகழ்வு. ஆனால் பல்வேறு காரணங்களால் பல ஜோடிகள் இதை தாமதப்படுத்துவதை தேர்வு செய்கின்றனர். இன்று மலட்டுத்தன்மை என்பது சிகிச்சை அளிக்கக்கூடிய ஒன்று என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மலட்டுத்தன்மை என்பது குறிப்பிட்ட ஒரு பாலினம் சார்ந்த பிர்ச்சினை இல்லை மேலும் அது பெண்களை மட்டும் தொடர்புபடுத்திய பிரச்சினை இல்லை. தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக மலட்டுத்தன்மை பிரச்சினை மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடியது.

வாழ்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இன்று வியாபித்திருக்கிற பல நோய்களை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியும். அதிகமாக மது அருந்துவதை நிறுத்தி, புகை பிடித்தலை கைவிட்டு, ஆரோக்கியமான உணவை உட்கொண்டு உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்வது சிறந்தது.

வீடு, மனை வாங்குபவர்களை பட்டா காப்பீடு எப்படி பாதுகாக்கிறது?

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment