சிவகார்த்திகேயன், இப்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடிக்கிறார். இந்த படம் இருமொழிகளில் தயாராகிறது.

பிரின்ஸ்’ படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைனை சேர்ந்த இளம் நடிகை நடிக்கிறார். அவர் பெயர் மரியா ரியாபோஷாப்கா. அவர் பற்றிய தகவல்கள் இங்கே!

மரியா ரியாபோஷாப்கா மே 10, 1997 அன்று உக்ரைனில் உள்ள கீவில் பிறந்தார்.

2008 இல், கீவ் மாநில நடனப் பள்ளியில், அவர் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார்.

பின்னர் அங்குள்ள தியேட்டர், சினிமா மற்றும் டெலிவிஷன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.

2018 ஆம் ஆண்டு வெளியான எட்டர் படம், மரியா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

2021 ஆம் ஆண்டில், நீரஜ் சோப்ரா இயக்கிய ஸ்பெஷல் ஓப்ஸ் 1.5: தி ஹிம்மத் ஸ்டோரி என்ற வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

மரியா உக்ரேனிய, ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.

மரியா ஒரு பயிற்சி பெற்ற நடனக் கலைஞர், கிளாசிக்கல், பாலே, போல்கா நடனங்களில் சிறந்தவர்.

பிரின்ஸ் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் சத்யராஜ், நவீன் பாலிஷெட்டி, பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் எல்எல்பி மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு தமன் இசையமைக்க, பீஸ்ட் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“