Advertisment

ஒரு வாரத்துக்கு வச்சு சாப்பிடலாம்… காரசாரமான பூண்டு குழம்பு செய்வது எப்படி?

Spicy South Indian Garlic Gravy Recipe in tamil: பூண்டு குழம்பு உடல் உபாதைகள் மற்றும் வயிற்று பிரச்சனைக்கு தீர்வு தரும் மருத்துவ குணமிக்க ஒரு குழம்பாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pundu kulumu in tamil: Garlic Gravy recipe making in tamil

Pundu kulumu in tamil: உங்கள் வீட்டில் எந்த ஒரு காய்கறியும் இல்லை என்றால் கவலையை விடுங்கள். சுவையான மற்றும் டேஸ்டியான இந்த குழம்பு தயார் செய்ய வெறும் பூண்டு மட்டும் இருந்தால் போதும். இவற்றைக் கொண்டு எளிமையான முறையில் குழம்பு செய்து அசத்தலாம். அதிலும் இந்த குழம்பிற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தி தயார் செய்தால், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.

Advertisment

இப்படிப்பட்ட சுவையான பூண்டு குழம்பு எப்படி எளிமையான முறையில் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம். இந்த பூண்டு குழம்பு, உடல் உபாதைகள் மற்றும் வயிற்று பிரச்சனைக்கு தீர்வு தரும் மருத்துவ குணமிக்க ஒரு குழம்பாகவும் உள்ளது.

பூண்டு குழம்பு செய்யத் தேவையானப் பொருட்கள்

பூண்டு – 30 பல்

சின்ன வெங்காயம் – 20

தக்காளி – 1

மல்லித்தூள் – 2 தேக்கரண்டி

குழம்பு மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி

புளி – நெல்லிக்காய் அளவு

நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி

தாளிக்க

கடுகு – 1 தேக்கரண்டி

சோம்பு – 1 தேக்கரண்டி

வெந்தயம் – 1 /2 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிது

நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.

பிறகு வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியதில்லை. தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இப்போது, கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளிக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பிறகு, அடுப்பை மிதமான தீயிலேயே வைத்து குழம்பு திக்காக ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.

இப்போது சூப்பரான பூண்டு குழம்பு ரெடி தயாராக இருக்கும். அவற்றை சூடான சாதத்தோடு பரிமாறவும்.

அத்தியாவசிய தேவையான பூண்டு குழம்பை டேஸ்டியாக செய்து மகிழுங்கள்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“

Lifestyle Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Food Receipe Tamil Food Recipe Garlic Tamil Recipe Tamil Recipe Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment