Advertisment

ஊதா நிறமாக மாறிய இங்கிலாந்து ராணியின் கைகள்: என்ன காரணம்?

நீண்ட நாட்களுக்குப் பிறகு, வெளியான ராணியின் தோற்றம் காரணமாக அந்த புகைப்படங்கள், உடனடியாக வைரலானது. அதேசமயம், சில அரச பார்வையாளர்களையும் கவலையடையச் செய்தது. அதற்கு காரணம், 95 வயதான ராணியின் கைகள் ஊதா நிறத்தில் இருந்தது தான்.

author-image
WebDesk
New Update
ஊதா நிறமாக மாறிய இங்கிலாந்து ராணியின் கைகள்: என்ன காரணம்?

இங்கிலாந்து ராணி எலிசபெத், உடல்நலக்குறைவு காரணமாக அரச பணிகள் மற்றும் நிகழ்வுகளில் இருந்து விலகியிருக்கிறார். அவரது முதுகில் சுளுக்கு ஏற்பட்டதையடுத்து ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் ராணியை அறிவுறுத்தினர்.

Advertisment

இந்நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத், பாதுகாப்புப் படைகளின் தலைவரான ஜெனரல் சர் நிக் கார்டரை சமீபத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வண்ணமயமான ஃப்ளோரால் ஆடையை ராணி அணிந்திருந்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, வெளியான ராணியின் தோற்றம் காரணமாக அந்த புகைப்படங்கள், உடனடியாக வைரலானது. அதேசமயம், சில அரச பார்வையாளர்களையும் கவலையடையச் செய்தது. அதற்கு காரணம், 95 வயதான ராணியின் கைகள் ஊதா நிறத்தில் இருந்தது தான்.

புகைப்படங்களை பார்த்த சிலர், குளிர் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். எனவே,அரச அரண்மனையின் வெப்பநிலையை இன்னும் அதிகமாக வைத்திருக்க வேண்டும் என்று ஊகித்தாலும், மற்றவர்கள் உடலில் இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் ரேனாடின் நிகழ்வுதான் (Raynaud Phenomenon) இந்த பாதிப்புக்கு காரணம் என்று கூறுகின்றனர்.

பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட படங்களில், ராணி எலிசபெத் மற்றும் ஜெனரல் சர் கார்ட்டர் இருவரின் கைகளும் அடர் ஊதா நிறத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய இராஜ்ஜியத்தின் தேசிய சுகாதார  மையம், ரேனாடின் நிகழ்வு குளிர், மன அழுத்தம் அல்லது உணர்ச்சி ரீதியான வருத்தத்தால் ஏற்படலாம். இது பொதுவானது மற்றும் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தாது கூறுகிறது.

இந்த குழப்பத்தைத் தீர்க்கவும், சிக்கலுக்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு நிபுணரை அணுகினோம்.

பாட்டியா மருத்துவமனையின் ஆலோசகர் மருத்துவர் சாம்ராட் ஷா, இந்த நிலை இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது என்று விளக்கினார். ஒன்று, வானிலை மிகவும் குளிராக இருக்கும் போது  ஏற்படும் உடலியல் நிலை. நுண்குழல்கள் மற்றும் நரம்புகளில் இரத்த நாளங்கள் சுருக்கம் அடைவதால் உடல் ஊதா நிறமாகிறது.

மற்றொன்று, இதயத்தில், திரவத்தை ஒன்றிலிருந்து மற்றொரு பகுதிக்கு நகர்த்தும் அல்லது அனுமதிக்கும் ஒரு சிறிய துளை அல்லது பாதையில் ஏற்படும் தடை உடல் ஊதா நிறத்துக்கும் மாற காரணம். இரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பதும் இதற்கு காரணம் என மருத்துவர் ஷா கூறினார்.

முதுமையில் நுண்குழாய்களில் இரத்த ஓட்டம் இல்லாததால் இந்த நிலை ஏற்படுகிறது. இருப்பினும், இது இளம் வயதிலும் ஏற்படலாம். தேசிய உயிர்தொழில்நுட்ப மையத்தின் தகவலின்படி, பெரிபெரல் சயனோசிஸ் (peripheral cyanosis) அரிதாக உயிருக்கு ஆபத்தான நோயாக இருக்கிறது. இருப்பினும், ஒவ்வாமை மருந்துகளை உள்ளடக்கிய இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்துமாறு மருத்துவர்கள் நோயாளியிடம் கேட்கலாம் என மருத்துவர் சாம்ராட் ஷா கூறுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment