Advertisment

இன்னசன்ட் கேரக்டர் மட்டும் தான் தராங்க : ராஜ பார்வை ரேஷ்மி லைப் ட்ராவல்

vijaytv serial news: பல சீரியல்களில் நடித்திருந்தாலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் தாமரை கேரக்டர் தான் ரேஷ்மிக்கு பயங்கர ரீச் கொடுத்தது.

author-image
WebDesk
New Update
இன்னசன்ட் கேரக்டர் மட்டும் தான் தராங்க : ராஜ பார்வை ரேஷ்மி லைப் ட்ராவல்

விஜய்டிவியின் ராஜ பார்வை சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் ரேஷ்மி ஜெராஜ். இவர் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரி படிப்பை பெங்களூருவில் முடித்தார். அதன்பிறகு நடிப்பின் மீதான ஆர்வத்தால் மாடலிங் செய்துகொண்டிருந்தார். பின்னர் ‘ஜோதே ஜோதேயலி’ என்ற கன்னட சீரியல் மூலம் தனது சின்னத்திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மதுமகலு, ஜஸ்ட் மாத் மாத்தலி போன்ற சீரியல்களில் நடித்தார்.

Advertisment
publive-image

கன்னட நடிகையாக இருந்த இவர் சன்டிவியின் விதி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் அறிமுகமானார். எனினும் அந்த கேரக்டர் அவ்வளவாக பேசப்படவில்லை. அதை தொடர்ந்துதான் விஜய்டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் செந்தில் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தொடரில் தாமரை என்கிற கேரக்டரில் நடித்தார். இதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அதில் நடித்துக்கொண்டிருக்கும்போதே சன்டிவியின் செல்வமகள் மற்றும் கன்னட மொழி உதயா டிவியில் தேவையானி போன்ற தொடர்களில் நடித்து வந்தார்.

publive-image

ஏராளமான கன்னட மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்திருந்தாலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் தாமரை கேரக்டரில் நடித்திருந்ததுதான் தமிழில் இவருக்கு பயங்கர ரீச் கொடுத்தது. இவர் கன்னட மொழியில் சரவணன் மீனாட்சி தொடரிலும் நடித்துவந்தார். சீரியல் நன்றாக சென்றுகொண்டிருந்தபோது கொரோனா குறுக்கிட்டது. தனது குழந்தை பருவத்தில், கார்ட்டூன் சேனல்களைப் பார்ப்பது ராஷ்மிக்கு மிகவும் பிடித்த ஒன்றாம். ரேஷ்மியை பார்த்தாலே அவருக்கு இன்னசன்ட் கேரக்டர் தான் தருகிறார்களாம். சிறு வயதிலேயே தமிழ் படம் அதிகமாக பார்த்ததால் தமிழ் ஈஸியாக கற்றுக்கொண்டுள்ளார். ரேஷ்மிக்கு பிடித்த நடிகர் சூர்யாதானாம்.

publive-image

கொரோனா காலத்தில் சீரியல் படப்பிடிப்புகள் நடத்த அனுமதியளிக்கப்பட்டாலும், வேறு மாநிலத்தைச் சேர்ந்த நடிகைகள் சென்னைக்கு வந்து செல்வதில், சிரமம் ஏற்பட்டது. அதனால் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டன. அந்த வகையில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நிறுத்தப்பட்டது. இதனால் கர்நாடகா திரும்பினார் ரேஷ்மி. மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்றபோது, ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடங்கப்பட்டாலும் அதில் ரேஷ்மிக்கு அதில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் ரேஷ்மி ரிச்சு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

publive-image

தாமரை மீண்டும் நடிப்பாரா என அவரது பேன்ஸ் ஆவலாக இருந்தனர். இந்த நிலையில், ராஜ பார்வை என்ற புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக முனாப் ரஹ்மான் என்கிற முன்னா ஹீரோவாக நடிக்க உள்ளார். அவர் ஒரு விபத்தில் பார்வையை இழந்த நபராக தான் நடிக்கிறார். ராஷ்மி கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். அவர்கள் இருவரும் சந்திக்கும் போது நடக்கும் விஷயங்கள் தான் சீரியலின் கதையாக உள்ளது. 'Sanjher Baati' என பெங்காலி சீரியலில் ரீமேக் தான் இந்த 'ராஜ பார்வை' சீரியல் என கூறப்படுகிறது. சீரியல் ஆரம்பித்து சில நாட்களிலேயே ரேஷ்மி நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

publive-image

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மி அவ்வபோது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிர்களிடையே கவனம் பெறுகிறார். நல்ல ரோல் என்றால் பெரிய திரையில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளாராம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijaytv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment