இயககுநர் ஷங்கர் இயக்கிய காதலன் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை நக்மா. காதலன் திரைப்படத்தில் சிறந்த நடிப்பிற்காக இவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. இவர் நடித்த தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்.அன்றய தமிழ் மற்றும் தெலுங்கு ஸ்டார் நட்சத்திரங்களோடு திரையை பகிர்ந்து கொண்டவர். அதோடு நின்றுவிடாமல் சில தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நக்மாவின் திரை வாழ்க்கையிலே மிகப் பெரிய பிளாக்பஸ்டர் எனறால் அது பாஷா திரைப்படம் தான். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. பட்டி தொட்டியெல்லாம் பாராட்டையும், வசூலையும் அள்ளி குவித்தது. அதற்க்கு பிறகு சில திரைப்படங்களும் நடித்தார். பின்பு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்.
நடிகை நக்மா நடிகர் ரஜினிகாந்துடன் பாஷா திரைப்படத்தின் போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் லண்டனில் நடிகர் ரஜிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்த தருணத்தை நினைந்து தாம் நெகிழ்வதாக பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.