யோகாவில் மிகுந்த ஆர்வம் கொண்ட, ரம்யா பாண்டியன் சமீபத்தில் யோகா பயிற்சி வகுப்புக்காக இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ரிஷிகேஷ் ஆன்மிக நகரத்துக்கு சென்றார். அங்கு 21 நாட்கள் பயிற்சியில் பங்கேற்று, யோகா டீச்சர் டிரெயினிங் சான்றிதழை வாங்கினார்...
பிறகு அங்கிருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிரபல அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். மேலும் ஒருநாள் முழுக்க பஞ்சாப் முழுக்க சுற்றிப் பார்த்தார்.
’பஞ்சாபில் ஒரு நாள்
பொற்கோவிலின் அமைதி முதல் ஜலந்தர் ஹவேலி வசீகரம் வரை- ஸ்ட்ரீட் ஃபுட் மற்றும் தாபா உணவுகளின் சுவை, வண்ணமயமான தெருக்கள், பஞ்சாபி இசை மற்றும் அன்றாட வாழ்க்கையை கொண்டாடும் அன்பான மக்கள்.
பஞ்சாப், அழகான நினைவுகளால் ஒரே நாளில் என் இதயத்தில் ஒரு வீட்டை உருவாக்கி விட்டாய்’
பொற்கோயில்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயில் சீக்கியர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகவும் விளங்கும் பொற்கோயிலில் உலகின் மிகப்பெரிய சமையல் அறையும் உள்ளது. இங்கு தயாராகும் உணவு, இலவசமாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
நாளொன்றுக்கு ஏறத்தாழ 30,000 மக்களுக்கு மேல் இங்கு உணவு வழங்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. சாதி, மத, இன வேறுபாடின்றி உலகெங்கிலும் உள்ள மக்கள் இக்கோயிலைத் தரிசித்துச் செல்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“