By: WebDesk
Updated: January 14, 2019, 01:59:48 PM
Pongal 2019, Pongal Kolam Rangoli Designs: ம் வீட்டு விசேஷமாக இருந்தால் முதலில் நாம் நம் வீட்டை அலங்கரிப்போம். அந்த வகையில் முதல் நிலையாக நம் வீட்டு வாசலில் அழகான ரங்கோலி கோலம் இட்டு அதற்கு பலவகையான வண்ணங்களை தீட்டி நம் வீட்டு வாசலை அலங்கரிப்போம்.
சாதாரண விசேஷத்திற்கூட நாம் அழகான ரங்கோலி கோலங்களை போட்டு அசத்துவோம். அந்த வகையில் இன்னும் ஒருவரம்தான் இருக்கிறது பொங்கல் திருநாள். இந்த பொங்கல் திருநாளன்று அனைவரது ஊரிலும் கோலம் போட்டிகள் வேற நடைபெறும், அப்போ என்ன கோலம் போடவேண்டும் என்று ஒரே பதட்டமாக இருக்கும். இந்த பொங்கலில் ரங்கோலி கோலம் உங்கள் வாசல்களை அழகாக்க வருகிறது
அதுமட்டும் இல்லாமல் இந்த பொங்கல் ரங்கோலி கோலம் வாசலில் போடுவதற்கு மிகவும் ஈசியாக இருக்கும். இதை கூட தேர்வு செய்து தங்களது பொங்கல் ரங்கோலி கோலமாக போடலாம்.பொங்கல் திருநாள் அன்று இந்த அழகிய புதிய ரங்கோலி கோலத்தை போட்டு, அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள வண்ணங்களை அடித்து, பார்த்தால் மிகவும் அழகாக இருக்கும்.
இந்த புதிய ரங்கோலி கோலங்கள் தங்களுக்கு பிடித்திருந்தால், வரவிருக்கும் பொங்கல் தினமன்று பொங்கல் ரங்கோலி கோலமாக போட்டு அசத்துங்கள்.