Advertisment

ராபிடோ பைக் செயலியில் உள்ள பிரச்சனைகள் என்னென்ன?

என்ன பாதுகாப்பு பின்புலன்ங்கள் நடைமுறையில் உள்ளன? இன்னும் பயனர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rapido, rapido app, rapido bike app, rapido chennai

rapido, rapido app, rapido bike app, rapido chennai

Rapido Issues: ஓலா, உபெர் போன்று பைக் பகிர்வு சேவைகளை வழங்கும் ராபிடோ செயலியின் பாதுகாப்பு நடைமுறைகள் தற்போது கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளன.

Advertisment

சில நாட்களுக்கு முன், கே.கே நகரில் வாழும் ஒரு மனிதர் ராபிடோ செயலியின் மூலம் பைக் சேவையை முன்பதிவு செய்திருக்கிறார். மழையால்  பைக்கிற்கு பதிலாய் காரை எடுத்து வந்தேன் என்று டிரைவர் கூறியதை நம்பி காரில் ஏறினார் கே.கே மனிதர். பின்பு தான் தெரிந்தது, தான் பணத்திற்காக கடத்தபட்டுள்ளேன் என்று. அம்மனிதரை, அடித்து காயப்படித்தியும், நிர்வாண புகைப்படம் எடுத்தும் அம்மனிதரை சித்திரவதை செய்துள்ளனர். பின்பு, இரண்டு மணி நேரம் கழித்து அம்மனிதரின் வீட்டருகில் இறக்கிவிட்டு, நாளை 50,000 கொடு, இல்லையேல் புகைப்படத்தை இன்டர்நெட்டில் விட்டுவிடுவோம் என்று மிரட்டி கிளம்பிவிட்டனர். ஆனால், சற்றும் மனம் தளராத அம்மனிதர் உடனே கே.கே நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இச்சம்பவம், ராபிடோ பயனர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. "பைக் கேப்டன்" என்று அழைக்கப்படும் ராபிடோ டிரைவர்கள் எவ்வாறு பணி அமர்த்தப்படுகிறார்கள் ? என்ன பாதுகாப்பு பின்புலன்ங்கள் ராபிடோ  செயலியில் நடைமுறையில் உள்ளன? இன்னும் பயனர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்வது? இது போன்ற தவறுகளுக்கு ராபிடோ நிறுவனத்தின் சட்ட பங்கு என்ன ? என்பது போன்ற கேள்விகள் நம்மில் எழத் தான் செய்கினறது.

கடந்த ஜூலை மாதம் சென்னை உயர் நிதி மன்றம் ராபிடோ செயலியை தடை விதித்திருந்தது. ராபிடோ மேல் முறையீட்டால், இந்த உத்தரவை தற்காலிகமாக நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment