Rasam recipes in tamil: நம்முடைய அன்றாட உணவுகளில் ரசம் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்லது. குறிப்பாக இந்த அடைமழை காலத்தில் ரசம் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் ஜுரம், சளி, கபம் போன்ற பிணிகளை அண்ட விடாது.
ஆனால், ரசம் தயார் செய்வதற்கு முக்கிய பொருளாக தேவைப்படும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இது விடாமல் பெய்து வரும் கனமழையால் தான் என்று செய்தியில் குறிப்பிடுகிறார்கள். மேலும், தமிழகத்தில் கனமழை இன்னும் சில நாடுகளுக்கு தொடரும் என்றும், இதனால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலையில் ஏற்றம் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே இந்த தருணத்தில் நமக்கு தேவையான காய்கறிகளை அவ்வப்போது வாங்காமல், ஒரு வாரத்திற்கு என மொத்தமாக வாங்கிக் கொள்வது நல்லது. தற்போது தக்காளி விலை அதிகரித்து வரும் நிலையில், தக்காளி இல்லாமல் ரசம் வைக்க இயலாது.
ஆனால், நாம் இன்று பார்க்காகவுள்ள குறிப்பின் மூலம் சுவையான மற்றும் மணமான ரசம் தயார் செய்யலாம்.

தக்காளி இல்லாமல் ரசம் செய்யத் தேவையான பொருட்கள்:
அரைக்க
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 10 பல்
மஞ்சள் – சிறிதளவு
உப்பு – சுவைக்குக்கேற்ப
புளி – சிறிதளவு
கொத்தமல்லி தழை
கருவேப்பிலை
எண்ணெய்
கடுகு

தக்காளி இல்லாமல் ரசம் சிம்பிள் செய்முறை:
முதலில் ஒரு அகலமான ஒரு பாத்திரம் அதில் நமக்கு தேவையான அளவு ரசத்திற்கு ஏற்ப புளியை கரைத்துக்கொள்ளவும்.
பின்னர், அவற்றுடன் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
தொடர்ந்து அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு மிக்சியில் இட்டு அவற்றை நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பிறகு அவற்றை புளி, மஞ்சள் கரைத்த கலவையுடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்துகொள்ளவும். தொடர்ந்து அவற்றுடன் கொத்தமல்லி தழை, கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து கைகளால் மிக்ஸ் செய்து கொள்ளவும்.
அதன்பின்னர், ஒரு பாத்திரம் எடுத்து எண்ணெய் சூடேற்றி இந்த கரைசலை அதில் சேர்த்து கொள்ளவும்.
ரசம் நன்கு பொங்கி வரும் போது, அதை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும். பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை ஒரு மூடியால் நன்கு மூடி விட வேண்டும்.
2 நிமிடத்திற்கு பிறகு அவற்றை திறந்து பார்த்தால் சுவையான மற்றும் மணமுள்ள ரசம் தயாராக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“