அப்போ சீரியல்ல மட்டும்தான் ஃபைட்டா: ரவினா, ஷில்பா வைரல் வீடியோ

சன் டிவியில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிப்பரப்பான தங்கம் சீரியலில் சிறு வயது ரம்யாவாக நடித்தார் ரவீனா.

சன் டிவியில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிப்பரப்பான தங்கம் சீரியலில் சிறு வயது ரம்யாவாக நடித்தார் ரவீனா.

author-image
abhisudha
New Update
Mouna Ragam 2

Mouna Ragam 2

விஜய் டிவியில் தினமும் இரவு ஒளிபரப்பாகும் மெளன ராகம் சீரியல் இப்போது பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் ரவீணா தாகா, ராஜீவ் பரமேஸ்வர், சிப்பி ரஞ்சித், ஷில்பா, சல்மான், ராகுல் என பலர் நடிக்கின்றனர். இதில் ஷில்பா, ஸ்ருதி என்னும் கேரெக்டரில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார்.

Advertisment

ரவினா தாஹா, சக்தி கேரெக்டரில் நடிக்கிறார். சன் டிவியில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிப்பரப்பான தங்கம் சீரியலில் சிறு வயது ரம்யாவாக நடித்தார் ரவீனா. தொடர்ந்து காரைக்கால் அம்மையார், ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் நடித்தார்.

மேலும் ஜில்லா, ராட்சசன், தீரன் அதிகாரம் ஒன்று, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களிலும் ரவீனா நடித்துள்ளார்.

ரவினாவும், ஷில்பாவும் சீரியலில் எலியும், பூனையுமாக வந்தாலும் வெளியில் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றி வருகின்றனர். இருவரும் சோஷியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவாக உள்ளனர்.

Advertisment
Advertisements

இந்நிலையில் ரவினா சமீபத்தில் இன்ஸ்டாவில் பகிர்ந்த ஒரு வீடியோ இப்போது வைரல் ஆகியுள்ளது. அதில், ரவினாவும், ஷில்பாவும் சேர்ந்து சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் ஒரு பாடலுக்கு ஒரே மாதிரியான நடன அசைவுகளுடன் அற்புதமாக ஆடி உள்ளனர்.

இதைப் பார்த்த ரசிகர்கள், அப்போ சீரியல் மட்டும்தான் ஃபைட்டா, சீரியல்ல மட்டும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி அடிச்சுக்க வேண்டியது, இன்ஸ்டால ஜாலியா ஃபன் பண்றது என விதவிதமாக கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வீடியோவ பாருங்க…

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: