Advertisment

கைவிடும் உரிமையாளர்கள்.. தனியாக தெருக்களில் தவிக்கும் நாய்கள்.. ஆய்வு கூறிய அதிர்ச்சி தகவல்!

உலக அளவில் உள்ளதை விட இந்தியாவில் கைவிடுதல் அளவுகள் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 34 சதவீதம் பேர் நாயை தெருவில் விட்டுவிட்டதாகவும், 32 சதவீதம் பேர் பூனையை கைவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
கைவிடும் உரிமையாளர்கள்.. தனியாக தெருக்களில் தவிக்கும் நாய்கள்.. ஆய்வு கூறிய அதிர்ச்சி தகவல்!

அனிமல் லவ்வர்ஸ் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில், இந்தியாவில் 80 மில்லியன் பூனைகள் மற்றும் நாய்கள் வீடற்ற நிலையில் இருப்பதாக ஒரு புதிய உலகளாவிய ஆய்வு தெரிவிக்கிறது.

Advertisment

மார்ஸ் பெட்கேர் இந்தியா (Mars Petcare India), முன்னணி விலங்கு நல நிபுணர்களின் ஆலோசனைக் குழுவுடன், ஒன்பது நாடுகளில் செல்லப்பிராணிகளின் வீடற்ற தன்மை பற்றிய முதல் கணக்கெடுப்பில் இந்தியாவிற்கு 2.4 இன் குறியீட்டு தரவரிசையை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் 10-புள்ளி தரவரிசையில், ஜெர்மனி 8.6 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்து 7.0 மற்றும் அமெரிக்கா 6.4 உடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.

"200 க்கும் மேற்பட்ட உலகளாவிய மற்றும் உள்ளூர் ஆதாரங்களின் குறியீட்டின்படி, பரவலான அணுகுமுறைகள் மீதான குவாண்டிட்டி ஆராய்ச்சி மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவில் 9.1 மில்லியன் தெரு பூனைகள் மற்றும் 62 மில்லியன் தெரு நாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது.

இந்த குறியீட்டு மாதிரியானது, நாடு சார்ந்த சூழல் மற்றும் சவால்களை முன்வைக்கிறது, இது "பிரச்சினையை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பாதிக்கும் முக்கிய காரணிகளை அடையாளம் காண உதவுகிறது". இது  ஒவ்வொரு நாட்டிலும் "மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் அடிப்படை சிக்கல்களை வெளிப்படுத்துகிறது.

கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகையில் 68 சதவிகிதத்தினர் வாரத்திற்கு ஒரு முறையாவது தெருப் பூனையைப் பார்ப்பதாகக் கூறுகிறார்கள் (உலகளாவிய சராசரி 43 சதவிகிதம்), மற்றும் 77 சதவிகிதத்தினர் வாரத்திற்கு ஒரு முறையாவது தெருநாய்களைப் பார்ப்பதாகக் கூறுகிறார்கள். (உலக சராசரி 41 சதவீதம்).

கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் பலரைத் தனிமைப்படுத்திய அடுத்தடுத்த லாக்டவுன்கள், செல்லப்பிராணிகள் வளர்க்க பலரை ஊக்குவித்தது.

ஆனால் வீட்டுக் கட்டுப்பாடுகள், நிதி வரம்புகள், நடைமுறைத் தடைகள் மற்றும் தெரு நாய்/பூனை பற்றிய தவறான விழிப்புணர்வு உள்ளிட்ட யதார்த்தமான காரணங்கள், விலங்கு காப்பகங்களிலிருந்து, விலங்குகளை தத்தெடுப்பதற்குப் பதிலாக ப்ரீடு நாய்கள் மற்றும் பூனைகளை வாங்குவதற்கு மக்களை வழிநடத்தியது.

உலக அளவில் 28 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, ​​தற்போதைய மற்றும் முந்தைய உரிமையாளர்களில் பாதி (50 சதவீதம்) பேர், கடந்த காலத்தில் செல்லப்பிராணியை துறந்ததாகக் கூறியுள்ள நிலையில், உலக அளவில் உள்ளதை விட இந்தியாவில் கைவிடுதல் அளவுகள் அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

சுமார் 34 சதவீதம் பேர் நாயை தெருவில் விட்டுவிட்டதாகவும், 32 சதவீதம் பேர் பூனையை கைவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

இந்த பட்டியலில் மெக்சிகோ (3.9), தென்னாப்பிரிக்கா (4.0), சீனா (4.8), ரஷ்யா (5.2), கிரீஸ் (5.4) போன்ற நாடுகளுக்குக் கீழே இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment