Advertisment

இஞ்சி சட்னியில் இவ்ளோ நன்மையா? டேஸ்டியா செய்வது எப்படி?

Ginger health benefits: சுவையான இஞ்சி சட்னி இட்லி, தோசை, அடைக்கு மட்டுமல்ல... சாதத்திற்கும் இது சூப்பராக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இஞ்சி சட்னியில் இவ்ளோ நன்மையா? டேஸ்டியா செய்வது எப்படி?

Recipe Tamil News, Ginger Chutney Tamil Video: இஞ்சி சட்னி, அத்தியாவசியமான ஒரு உணவுப் பொருள். உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதில் இதன் பங்கு அதிகம். அஜீரணம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், சளி, இருமல் உள்ளிட்டவைகளுக்கும் இது கண்கண்ட மருந்து. குழந்தைகளுக்கு இஞ்சி கொடுப்பது பாரம்பரியமாக நம் கலாச்சாரத்தில் இருக்கிறது.

Advertisment

அதே இஞ்சியை உணவில் சுவையாக கொடுத்தால், யார் வேண்டாம் எனக் கூறுவார்கள்? டிபனுக்கு சுவையான இஞ்சி சட்னி தயார் செய்வது எப்படி? என இங்கு பார்க்கலாம்.

Ginger Chutney Tamil Video: இஞ்சி சட்னி

இஞ்சி சட்னி செய்யத் தேவையான தேவையான பொருட்கள்: இஞ்சி - 1/2 கப், கடலை பருப்பு - 2 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - 5, கருவேப்பிலை - தேவையான அளவு, புளி - ஒரு கோலி அளவு, வெல்லம் - 1 தேக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவைக்கு ஏற்ப, கடுகு - சிறிதளவு

இஞ்சி சட்னி செய்முறை

முதலில் இஞ்சியைக் கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். புளியை சிறிது தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பின்னர் அதை தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதே வாணலியில் கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும். ஊறவைத்த புளியை சிறிதளவு நீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வதக்கிய அனைத்து பொருட்களுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து அதனுடன் புளிக் கரைசலையும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை தாளித்து கொட்டவும். இப்போது சுவையான இஞ்சி சட்னி ரெடி. இட்லி, தோசை, அடைக்கு மட்டுமல்ல... சாதத்திற்கும் இது சூப்பராக இருக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment