Advertisment

ஆன்லைனில் சொத்து வில்லங்க சான்று: 1950-ம் ஆண்டு முதல் வழங்க உத்தரவு

வில்லங்க விவரங்களை ஆன்லைன் மூலம் இலவசமாகப் பார்ப்பதுடன் பிரதி எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆன்லைனில் சொத்து வில்லங்க சான்று: 1950-ம் ஆண்டு முதல் வழங்க உத்தரவு

தமிழ்நாட்டில் 1950-ம் ஆண்டுக்குப் பிறகு, பதிவு செய்யப்பட்ட சொத்து வில்லங்க விவரங்களையும் ஆன்லைனில் பார்க்கும் வசதி விரைவில் கொண்டுவரப்படும் எனக் கடந்த ஆகஸ்ட் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது.

Advertisment

அந்த அரசாணையில், `1.1.1950 முதல் 31.12.1974 வரையில் உள்ள ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை மண்டலத்தில் 15,10,799 ஆவணங்களும், கடலூரில் 23,49,220 ஆவணங்களும், கோவையில் 17,58,802 ஆவணங்களும், மதுரையில் 41,02,469 ஆவணங்களும், சேலத்தில் 20,28,518 ஆவணங்களும், திருநெல்வேலி மண்டலத்தில் 42,37,916 ஆணவங்களும், தஞ்சாவூர் மண்டலத்தில் 19,87,827 ஆவணங்களும், திருச்சி மண்டலத்தில் 23,18,159 ஆவணங்களும், வேலூர் மண்டலத்தில் 19,87,402 ஆணவங்கள் என மொத்தம் 2,22,81,112 ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ் வசம் ஒப்படைக்கப் படுகிறது" என குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கெனவே 1987-ம் ஆண்டு வரையிலான சொத்து விவரங்கள் கணினி மயமாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 1975-ம் ஆண்டு வரையிலான சொத்து விவரங்களைப் பெறும் வசதி 2018-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

தற்போது, 1950-ம் ஆண்டு வரையிலான சொத்து விவரங்கள் ஆன்லைன் மூலம் பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தவுள்ளது. வில்லங்க விவரங்களை ஆன்லைன் மூலம் இலவசமாகப் பார்ப்பதுடன் பிரதி எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Registration
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment