Advertisment

சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டத்தின் பின் இருக்கும் இந்த பெண் யார் ?

மல்கியல் நவம்பர் மாதம் 17ம் தேதி,1949ல் காலமானார். அவர் இந்த சமூகத்தின் மாற்றத்திற்காக பெரிதும் உழைத்தவர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Remembering Theresa Serber Malkiel

Remembering Theresa Serber Malkiel

Women's day Remembering Theresa Serber Malkiel :  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1909ம் ஆண்டு சோசியலிஸ்ட் கட்சியின் சார்பில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. சில ஆண்டுகளாக பெண்கள் தினம் பிப்ரவரி மாதம் 28ம் தேதி கொண்டாடப்பட்டது. அதற்கான காரணம் இந்த பெண்மணி தான்.

Advertisment

தெரசா செர்பெர் மல்கியல், மே 1ம் தேதி, 1874ம் ஆண்டு, நடுத்தர யூதக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் இல்லம் ரஷ்யாவின் போலந்து பகுதியில் அமைந்திருந்த பார் என்ற சிறிய நகரத்தில் இருந்தது. யூதர்களுக்கு எதிரான கருத்துகளும் சூழல்களும் அதிகமாக இருந்த காலத்தில் தன்னுடைய இளமை காலத்தை கழித்தார் அவர்.

Remembering Theresa Serber Malkiel

பல்வேறு இடங்களில் யூதர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்ட 19ம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் நிறைய யூதர்கள் பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அப்படியாகவே மல்கியல் அமெரிக்கா வந்தடைந்தார். 1891ம் ஆண்டில் அமெரிக்கா வந்த மல்கியல் யூத உழைப்பாளிகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவாக உழைக்க ஆரம்பித்தார்.

மல்கியல் தான் முதல்முறையாக பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற ஐடியாவை கொடுத்தவர். அமெரிக்காவில் இவர் கொடுத்த ஐடியாவைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள நாடுகளிலும் பெண்கள் தினம் என்ற சிந்தனையை கையில் எடுக்கத் துவங்கினர். அமெரிக்காவில் பெண்களின் வளர்ச்சிக்கு குரல் கொடுக்கத் துவங்கினார் மல்கியல்.  பிற்காலத்தில் அமெரிக்காவில் பெண்களின் ஓட்டுரிமைக்காக போராடியவர் மல்கியல்.

யூதர்களின் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சியில் மல்கியல்

அமெரிக்கா வந்தடைந்த பின்பு, ஏனைய யூத பெண்களைப் போலவே அமெரிக்க கடை ஒன்றில் வேலை பார்க்கத் துவங்கினார். ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேளைக்கு சேர்ந்த அவர் ஒரு வருடம் கழித்து பெண்களுக்கான சங்கம் ஒன்றை துவங்கினார். வேலைக்குச் செல்லும் பெண்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்த சில முக்கியமான சங்கங்களில் ஒன்றாக இருந்தது இவர் நிர்வகித்த Women’s Infant Cloak Makers’ சங்கம்.

மல்கியலின் வாழ்க்கை வரலாற்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட மிக முக்கியமான ஆராய்ச்சியின் விளைவாக From Sweatshop Worker to Labor Leader: Theresa Malkiel, a Case Study என்ற புத்தகம் உருவானது. வரலாற்றறிஞர் சாலி எம். மில்லர் தன்னுடைய குறிப்பில் “யூத மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட சில சுய உதவிக்குழுக்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை நியூயார்க் நகரம் கண்கூட பார்த்த சமயம்.

அந்த சுய உதவிக்குழுக்கள் முழுக்க முழுக்க ஆண்களை மையப்படுத்தி தான் இருந்ததே தவிர பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை என்பதையும் மில்லர் குறிப்பிட்டிருக்கிறார்.

மல்கியல் நவம்பர் மாதம் 17ம் தேதி,1949ல் காலமானார். அவர் இந்த சமூகத்தின் மாற்றத்திற்காக பெரிதும் உழைத்தவர். இருப்பினும் அவருடைய நினைவஞ்சலி நிரலில் புகழ்பெற்ற நியூயார்கை சேர்ந்த வழக்கறிஞரின் விதவை மனைவி என்று தான் சுட்டிக்காட்டப்பட்டார்.

மேலும் படிக்க : பெண்கள் தின வாழ்த்துகள்

அதனால் தானோ என்னவோ மல்கியலின் முக்கியமான பணி அமெரிக்காவில் வேலைக்கு செல்லும் பெண்களிற்கான உரிமைகளை மீட்டெடுப்பதாக அமைந்தது.

ஆனால் வெகு சில நாட்களிலேயே, அரசியல் மாற்றங்கள் இல்லாமல், பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் என்பது சாத்தியமில்லை என்பதை மல்கியல் உணார்ந்தார். மிகவும் சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த மல்கியல் பின்பு ஒரு நாளில் சோசியலிஸ்ட் கட்சியின் மிக முக்கிய பங்கு வகித்த தலைவரானார். சோசியலிஸ்ட் லேபர் கட்சியில் சில வருடங்கள் மிக முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய மல்கியல் பிறகு அமெரிக்க சோசியலிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

சோசியலிஸ்ட் கட்சியில் பெண்கள் இணைவதற்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பெண்களின் பிரச்சனைகள் தீர்ப்பதற்கு அவர்களுக்கென தனியான ஒரு கட்சி/அமைப்பு இருந்தால் தான் சாத்தியம் ஆகும் என்று 1907களில் உணரத் துவங்கினார்.

பின்பு சோசியலிஸ்ட் கட்சியே பெண்களுக்கென தனி அமைப்பினை உருவாக்கி, அந்த கமிட்டியின் “இமிக்ரெண்ட் வுமன் ஆக்டிவிஸ்ட்டாக” தேர்வு செய்யப்பட்டார். ஷர்ட்வெய்ஸ்ட் ஸ்ட்ரைக் என்ற போராட்டத்திற்கு மிகவும் உறுதுணையாக ஆதரவு அளித்து வந்தார் மல்கியல். ‘The diary of a Shirtwaist Striker’ என்ற புத்தக்கத்தில், இந்த அம்மையாரின் போராட்ட வரலாறு நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.

சங்கவாதியாக அவர் இருந்தது போலவே பெண்களின் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்கவும் துவங்கினார். நியூயார்க் நகரில் பெண்களின் வாக்குரிமைக்காக முதன்முதலாக குரல் கொடுத்தவர் இவர் தான். தேசிய எக்ஸ்கியூட்டிவ் கமிட்டியின் மூன்று தலைவர்கள் குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment