Tamil Serial News, Poove Poochudava Reshma Muralidaran
Tamil Serial News: சின்னத்திரை நடிகைகளுக்கு எப்போதுமே ரசிகர்களிடத்தில் கொஞ்சம் நெருக்கம் அதிகமாகவே இருக்கும். குடும்பம், அதிலிருக்கும் பிரச்னைகள் தான் பொதுவாக சீரியல்களின் கதைகளமாக இருக்கும். அதனால் சாதாரண மக்கள் அதோடு விரைவில் நெருக்கமாகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பூவே பூச்சுடவா’ சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா முரளிதரன் அதிக ரசிகர்களைக் கொண்டிருக்கிறார்.
சிவப்பு உடையில் தேவதையாக…
அந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவருடைய துறுதுறுப்பான நடிப்பு இந்த சீரியலின் பெரிய பிளஸ். அது மட்டும் அல்லாமல் இந்த சீரியல் நகைச்சுவை கலந்த கதை என்பதால், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
டிரடிஷனல் லுக்…
ரேஷ்மா பிறந்தது கேரளாவில், வளர்ந்தது பெங்களூருவில். மாடலிங் துறையில் கொண்டிருந்த ஈர்ப்பால், சென்னைக்கு மூட்டையைக் கட்டியிருக்கிறார். 2015-ல் சென்னையில் நடந்த பேஷன் ஷோவில் முதல் 10 இடத்திற்குள் வந்திருந்தார். 2016-ல் நடந்த ஃபேஷன் ஷோவில் இரண்டாவது runner-up ஆகவும் வந்திருக்கிறார். அதன்பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ராகவ் உடன் இணைந்து ’டான்ஸ் ஜோடி டான்ஸ்’ மூலம் தமிழ் ரியாலிட்டி ஷோவில் அறிமுகமானார். இந்த நிகழ்ச்சி தான் அவருக்கு ஒரு மைல் கல்லாக அமைந்தது. அவர் நடிப்பின் மீது உள்ள வெறியையும் நடனத்தின் மீது அவருக்கு இருக்கிற காதலையும் இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தான் இவருக்கு ’பூவே பூச்சூடவா’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
நடிகை ரேஷ்மா
‘நான் நல்லா பென்சில் ஸ்கெட்ச் வரைவேன்’ என்று முன்பு ஒரு நேர்க்காணலில் குறிப்பிட்டிருந்த ரேஷ்மா, ’ஃப்ரீ டைமில் ஒரு பென்சிலும் பேப்பரும் இருந்தால், வரைய உட்கார்ந்துடுவேன். எனக்கு நானே டப்பிங் கொடுத்துக்கிறேன். சீரியலைப் பொருத்தவரை, ஒரு சிலரை தவிர மத்தவங்க யாருமே அவங்களுக்கு டப்பிங் கொடுக்கிறதில்லை. நடிச்சுக்கிட்டே டப்பிங் கொடுக்க நேரம் இருக்காது. ஆனாலும், நான் டப்பிங்கை விரும்பிச் செய்யறேன். ஸ்பாட்ல டயலாக் சரியாகப் பேசாமல் உளறிட்டாலும் டப்பிங்கில் சரி செஞ்சுக்கிறேன்’ என்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”